பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் 101 இல்லையேல் 'கண்' என்பது உருபோ இல்லையோ என்று மயங்க வேண்டிவரும். பவணந்தியாரும் "ஏழன் உருபு கண்ணாதியாகும்" என்று கூறினா ரேனும், மீண்டும் கண், கால், கடை இடை" என்று 'GOOT' உருபையும் சேர்த்துக் கூறுதல் காண்க. ஊரகத்திருந்தான்' என்பதில் அத்துச் சாரியை உருபின் முன்னர் வாராது உருபின் பின்னர் வினைக்கு முன்னால் வந்துள்ளது பொருத்தமின்று கூறுவதும் பொருத்தமின்று.ஊரகத்தில் உள்ள (ஊர் + அகம் + அத்து +இருந்தான்) அகம் வேற்றுமை உருபு அன்று. உள் என்று பொருள் தரும் பெயர்ச் சொல்லாகும். அகத்தே வா (உள்ளே வா) என்ற வழக்கு நாஞ்சில் நாட்டில் உள்ளது. ஆகவே ஊரினகம் எனற்பாலது ஊரகம் என வந் ஊரகத்தின்கண்' எனக் கூற வேண்டியது என்று துளது. 'ஊரகத்து' எனத் தொகையாக வந்துள்ளது. ஆதலின் இக்காரணமும் ஏற்புடைத்தன்று என்று அறியலாகும். இவ்வேற்றுமை உருபுகள் எல்லாம் தத்தமக்கு என விதிக்கப்பட்டுள்ள பொருளையன்றிப் பிற பொருளையும் அறிவிக்கும். வழக்கிலிருக்கும் மொழி இலக்கண நூலார் வரையறுக்கும் நெறிக்குள்ளே என்றும் அடங்கியிராது. தொல்காப்பியர் இதனை நன்கு அறிந்தவர். ஆதலின், "கிளந்தவல்ல வேறு பிற தோன்றினும் கிளந்தவற்றி யலான் உணர்ந்தனர் கொளலே' என்று கூறி இலக்கண நெறிக்கப்பால் தோன்றுவன வற்றையும் இலக்கண நெறிக்குட்படுத்துக என ஆணையிட்டார். வேற்றுமையும் உருபினைக்கொண்டு