பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 143 ஆய்தொறும் அளப்பில் இன்பம் அளிக்கும் செந்தமிழ் இலக்கியங்களை இயற்றினர். விரும்பிய பெண்ணை விரும்பிய ஆடவன் மணக்க முடியாதவாறு பெற்றோர்கள் உளநிலை தடையாக இருக்குமேல் காதலன் தன் காதலியை அவள் பெற் றோர்கள் அறியாமல் கொண்டு செல்வான். இவ்வாறு கொண்டு செல்வதைக் 'கொண்டு தலைக் கழிதல்' என்பர். தலைவன் தலைவியைக் கொண்டு சென்ற பின்னர் அவளைக் காணாத நற்றாய் (பெற்ற தாய்) பலவாறு புலம்புவாள். பேரூரின் தெருக்களில் தலைவியைத் தேடி அலைவாள் பெற்ற தாய். வளர்ப்புத் தாய் ஊரைக் கடந்தும் சென்று தேடுவாள். காதலிக்கு உறுதுணையாய் இருந்து உதவுபவள் அவள் தோழியாகும். தலைவி நிலைமையைத் தலைவ னுக்கும் தலைவன் உளநிலையைத் தலைவிக்கும் அறி விப்பாள். தலைவி தலைவனோடு புறப்பட்டுச் செல்ல ஆகும் உதவிகளைச் செய்வாள்: தலைவி வீட்டை விட்டுச் சென்ற பின்னர் வருந்தும் பெற்ற தாய், வளர்ப்புத்தாய் முதலியோர்க்கு ஆறுதல் கூறிக் காதலால் பிரிங் த தலைவி பொருட்டு வருந்துதல் பொருந்தாது என்று பலவாறு தேற்றுவாள். தலைவனும் தலைவியும் காதலே துணையாகப் புறப்பட்டுச் செல்லுங்கால் வழியிற் கண்டோர் கூறுதலும், தலைவன் தலைவிக்குக் கூறலும் சுவை மிக்க இலக்கியத் துறைகளாக அமையும். தலைவன் தலைவியை மணப்பதற்கு முன்னும் மணந்த பின்னரும் தலைவியை விட்டுப் பிரிந்து