பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 தொல்காப்பிய ஆராய்ச்சி பொருள் கொணர்ந்து துய்த்தலுமின்றி எஞ்ஞான் றும் திருத்தகவிற்றாகியதோர் உள்ள நிகழ்ச்சி" என்று கூறுகின்றார். "செல்வம் என்பது சிந்தையின் நிறைவு" என்று கொண்டாலும் வாழ்வுக்குச் செல்வம் இன்றியமையாதது. பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லையன்றோ? பொருள் உடைமையிலும் இருபாலாரும் ஒத்திருந்தால் இருவரும் தன்மதிப் புடன் வாழ இயலும். இல்லையேல் செல்வ மிகுதி செல்வமின்மையைக் கண்டு எள்ளும் நிலை ஏற்படாம் லிருக்க வேண்டும். உலகியலில் அது எளிதில் கூடுவதாய் இல்லை. சூழ்நிலையையும் சுற்றுச் சார்பை யும் நம்மால் வெல்லுவது என்பது போற்றற்குரியது தான். ஆனால் இயலாதே. ஆகவே திருவினும் ஒத்திருத்தல் நன்றன்றோ? இவ்வாறு ஒத்த நிலையில் ஒருவரை ஒருவர் காணும் வாய்ப்புகள் அன்று இருந்திருக்க வேண்டும். ஆண்களும் பெண்களும் வேறுபாடின்றிப் பழகும் சூழ்நிலை உள்ள மக்களினத் தில் சமநிலை உள்ளவர்கள்தான் சந்திக்க இயலும். சந்திப்பு நிகழுங்கால் காதல் உணர்ச்சியால் உந்தப்பட்டு ஒருவரை ஒருவர் விரும்பத் தொடங்குவர். ஊழ்வினையால் அவர்கள் கூட்டுவிக்கப் பெற்றாலும் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ள முயலாது இரார். அங்ஙனம் அறிந்துகொள்ள விரும்புங்கால் ஒருவரைப் பற்றி ஒருவர் ஐயம் கொள்ளுதல் இயல்பு. ஐயப்படுதலே அறிவுக்கு அடிப்படை. அறிவுடையோரே எதிலும் ஐயம் கொண்டு தீர உசாவி அறிவர். தலைவன், தலைவியாகப் போகின்றவளைக் கண்ட வுடன் அவள் தோற்றத்திலோ, பழகும் வகையிலோ மயங்கி விடுதல் கூடாது. பலவகைச் சிறப்புடையவ ளாகக் காணப்படும் தோறும் ஐயப்பட்டு உண்மை