பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 161 முதிர்ச்சி யுண்டாகும் என்று கருதினர். இருவர்க்கும் நான்கு ஆண்டுகள் வேறுபாடுறலாம். இருபத்து நான்கு வயதுள்ள ஆடவன் இருபது வயதுள்ள பெண்ணை மணக்கலாம் என்பதே. வடிவால் ஒத்தல்' என்பது தோற்றப் பொலிவாலும் உருவமைப்பாலும் ஆகும். குட்டையாய் இருப்பவன் நெட்டைப் பெண்ணையோ, நெட்டையாய் இருப்பவன் குட்டைப் பெண்ணையோ, ஒல்லியாயிருப்பவன் பருத் திருப்பவளையோ,பருத்து இருப்பவன் ஒல்லியாய் இருப்பவளையோ மணத்தல் பொருத்தமன்று என்பது யாவரும் அறிந்ததுதானே. 'காமவாயில் என்பது காதல் வேட்கையாகும். காதல் வேட்கை அல்லது பாலின்ப விருப்பம் இருவருக்கும் ஒத்திருத் தல் வேண்டும். இல்லையேல் அமைதி வாழ்வுக்குத் தடையுண்டாகும். 'நிறை' என்பது உள்ளத்தை நிறுத்தும் தன்மை. அதுதான் 'கற்பு' எனப்படுவது. இன்று கற்பு, பெண்ணுக்கு மட்டும்தான் வேண்டும் என்று வற்புறுத்துகின்றோம். ஆண் எப்படி வேண்டுமானாலும் உள்ளத்தைத் திரியவிட்டு உடலைக் கெடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணியுள்ளோம். ஆசிரியர் தொல்காப்பியர் கற்பு இருபாலார்க்கும் வேண்டும் என்பது இல்லற வாழ்வின் இனிமை நலத்திற்காகவே. அருள்' என்பது பிறர் துன்பம் கண்டு இரங்குதல். இஃதினும் ஒற்றுமை வேண்டும். இல்லையேல் வீட்டில் ஓயாப்போர்தான் நிகழும். உணர்வு' என்பது உலகியலால் செய்யத்தகுவதை அறிதலாம். 'திரு' என்பது கண்டாரால் விரும்பப் படும் தன்மையைப் பெற்றிருத்தலையும் குறிக்கும். நச்சினார்க்கினியர் காணும் பொருள் சிந்திக்கத் தக்கது.திருவென்பது' பொருளுடைமையும் 11-1454