பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 தொல்காப்பிய ஆராய்ச்சி மக்களுக்குமுரியனவாய் இருந்தன. தகுதியுடையோர் பெற்றனர். வருண வேறுபாட்டால் சிலர் விலக்கப்பட் டிலர். அன்று தமிழகத்தில் வருண வேறுபாடும் கிடையாது. இன்ன வருணத்திற்கு இன்ன கல்வி தான் என்று வரையறுக்க வேண்டிய நிலையும் உண்டாகவில்லை. 'வேந்துறு தொழிலே யாண்டினது அகமே என்ற நூற்பாவால் அரசியற் பணிக்காக வெளிநாடு சென்றனர் என்பதும் அவ்வாறு செல்வோர் ஓராண் டுக்குமேல் மனைவியைப் பிரிந்திருத்தல் கூடாது என்பதும் அறியக் கூடியன. நிலையாய அரசும், அதில் குடிமக்கள் பங்கு கொள்ளும் இயல்பும், அக் கால நிலையைச் சிறப்பிப்பன. "ஏனைப்பிரிவும் அவ் வயின் நிலையும்' என்பதனால் பொருள்வயின் பிரிவும் ஓராண்டுக்குமேல் நீட்டித்தல் கூடாது என்ற வரை யறை இருந்துள்ளது என்று அறியலாம். தூது வயிற்பிரிவும் அரசியல் பணியின் பொருட்டு உண் டாகும் பிரிவா தலின் வேந்துறு தொழிலில் அடக்கலே சிறப்புடைத்து. இக்காலத்தில் செல்வர்களும் உயர் அலுவலர் களும் மாணவர்களும் இன்பச் செலவு மேற்கொண்டு சென்று வருவது வழக்கமாய் உள்ளது. பூங்காக் களுக்குச் சென்று பொழுது போக்கலும் நகர மக்க ளிடையே பெருவழக்காய் உள்ளது. இவையெல்லாம் வெளிநாட்டார் தொடர்பால் நாம் பெற்ற பயன் என்று கருதுவோரும் நம்மில் உளர். ஆனால் தொல் காப்பியர் காலத்திலே இவை வழக்கில் உள்ளன என் பதை அவர் அறியார். கணவனும் மனைவியுமாக இன்பச் செலவில் ஈடுபட்டுப் பொழுது போக்கினர் என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.