பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 209 இவ்வாறு கூறியதன் கருத்தென்னவெனில் தலைவன் தான் கூறிய மொழியில் தவறிவிட்டான். பொய் கூறியவனாகிவிட்டான். பொய் கூறியவன் நாட்டில் மழையும் பெய்யுமா? அருவியும் ஓடுமா? என்பதே. +4 இளமழையாடும்! இளமழையாடும் வளமழைவைகலும் ஆடும் என் முன்கை 33 வளைநெகிழ வாராதோன்குன்று (கலி-- 41) தோழி! தலைவன் வாராமல் மெலிந்து விட்டேன். வளைகள் கழன்றோடுகின்றன. வருவேன் என்று கூறிய மொழியை மறந்தவன் மலையில் மழை பெய்ய வருகின்றதே! இஃது என்ன வியப்பு! என்று பொருள் தோன்றுவதுதான் இறைச்சி.' இவ் வாறு அமைத்துப் பாடும் ஆற்றல் நுண்மாண் நுழை புலனும், இலக்கியப் பயிற்சியும், இயற்கைப் பொருள் அறிவும் மிகுதியுமுடையார்க்கே சாலும். இவ்வாறு " பாடுவோர் இக்காலத்து அரியர் ஆய்விட்டார். விட்டுப் தலைவன் தலைவியைப் பாராட்டுவான், அவ்வாறு பாராட்டுவானேல், தலைவன் தலைவியை பிரிவான் என்பதனை அறிதல் வேண்டும். தான் பிரிந்து சென்று செய்வினை ஆற்றுவதற்குத் தலைவி இசையாளோ என்று ஐயுற்றுத் தான் தலைவியைப் புகழத் தொடங்குவான். புகழ்வதுமட்டுமன்றி அவள் விரும்பும் வகையில் அவள் அணிகலனைத் திருத்துவான்; கூந்தலை நீவுவான். முள்ளுறழ் முளைஎயிற்று அமிழ்தூறும் தீநீரைக் கள்ளினும் மகிழ்செயும் எனஉரைத்தும் அமையார் ஒள்ளிழை திருத்துவர் காதலர் மற்றவர் உள்ளுவ தென்கொல் அறியேன் என்னும் 14-1454 என்