பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 215 நிரை கவர்தல் மிகமிகப் பழங்காலத்ததாயினும் அறநெறியின் பாற்பட்டது. ஆதலின் வழிவழியாகக் கொள்ளப்பட்டு வந்துள்ளது. புலவர்களும் நிரை கவரும் நிகழ்ச்சியைப் பல துறைப்படுத்தி வகுத்து இலக்கியப் படைப்புக்கு நிலைக்களன் ஆக்கியுள்ளனர். ஐம்பத்தொரு துறைகள் உள்ளன. இவற்றுள் கவர்ந்த நிரையை மீட்டற்குரியனவும் அடங்கும். கவர்ந்த நிரையை மீட்டல் கரந்தை எனப்படும். இத்துறைப் பெயர்களை ஆராயுங்கால் பண்டைத் தமிழர்களின் வரலாற்றுச் செய்திகள் சில புலப்படும். பகை நாட்டில் சென்று பகைவர் அறியாவகை யில் அவர் நாட்டுச் செய்திகளை அறியும் ஒற்று" முறை அக்காலத்திலேயே இருந்துள்ளது. வெற்றிக் காகக் கடவுளை வேண்டியுள்ளனர். வெற்றிக்காக வேண்டும் கடவுளைக் கொற்றவை" என அழைத் தனர். கொற்றம் என்றால் வெற்றி. 44 மூவேந்தர்களும் தங்களுக்கென அடையாளப் பூக்களைக் கொண்டிருந்தனர். மிகப் பெரிய படை களைக் கொண்டிருந்தனர். "ஏந்து புகழ்ப் போந்தை, வேம்பே, ஆர் என வருஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்" போந்தை = பனம்பூ, ( சேரர்க்குரியது); வேம்பு வேப்பம் பூ (பாண்டியர்க்குரியது ); ஆர்- ஆத்தி { சோழர்க்குரியது ). மாண்ட வீரர் பொருட்டுக் கல் நட்டு வழிபடும் முறையும் சுட்டப்பட்டுள்ளது. பண்டைத் தமிழகத் தில் வீரர் வழிபாடு மிகவும் சிறந்தோங்கி இருந்தது. இவ்வீரர் வழிபாடுதான் கோயில்களின் தோற்றத் திற்கு அடிப்படைக் காரணம் என்பர் ஆராய்ச்சி யாளர்கள். போரில் மாண்ட வீரர்க்குக் கல் நட்டு வழிபாடு செய்த மக்கள் வீர மங்கையர்க்கும் கல்