பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 தொல்காப்பிய ஆராய்ச்சி பகை நாட்டுக்கு "யான் போர் செய்ய வருகிறேன் ஆவும், ஆவைப்போன்று பிறர்க்கு நன்மை செய்யும் அந்தணர்களும், பெண்களும், பிணியுடையோ ரும் குழந்தைகளும் வெளியேறட்டும்' என்று அறி விப்பான். ஆக்கள் தாமே செல்லும் ஆற்றல் அற் றன ஆகையால் அவற்றைப் போர்க்கள நாட்டினின் றும் அப்புறப்படுத்த வருவான். உண்மையாகவே ஆக்களைக் காக்க வேண்டுமென்று வருவதால் பிறர் அறியாமல் ஆநிரையைக் கொண்டு செல்ல முயல் வான். ஆனால் ஆநிரைக்குரிய நாட்டானும் விழிப்போடு இருந்து பகையைத் தடுக்க முயல்வானாகையால் பகையரசன் கருதுவதுபோல் ஆவினைக் கொண்டு சென்றுவிடல் முடியாது. ஆதலின் இருசாரார்க்கும் போர் தொடங்கும்.

  1. 4

ஆவைக் காக்க வேண்டும் என்று எண்ணியது அறநோக்கு. "போருக்கும் காதலுக்கும் புகழ் அறநெறி வேண்டாம்" என்று பிறநாட்டார் கூறினா லும், தமிழர்கள் இரண்டுக்கும் அடிப்படையாக அறத்தையே கொண்டனர். ஆநிரை கவர்தல் அறத்தின் பொருட்டேயன்றிப் பிறிதின் பொருட் டன்று. ஆதலின் ஆசிரியர் வெட்சி இன்னது என இலக்கணம் கூறுமிடத்து. ஆதந்து ஓம்பல் என்றார். ஆநிரையைக் கொண்டு போந்து பாது காத்தல்' வேண்டுமென்ற அறநோக்கத்தாலேயே ஆநிரையைக் கவரக் களவில் செல்வர். 44 66

  • வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந் தோம்பல் மேவற் றாகும்

வேந்துவிடு முனைஞர்=வேந்தனால் விடப்பட்ட பணித் தலை வர், வேற்றுப் புலம் = வேற்றரசன் இடத்தில், களவின் = களவி னாலே, ஆதந்து ஓம்பல் = ஆநிரையைக் கொண்டு போந்து பாது காத்தலை, மேவற்று = பொருந்துதலையுடையது.