பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 231 வீரம் இன்னவாறு இருந்ததென அறியலாம்; வாழ்வியல் செயல் முறைகளும் வெளிப்படுகின்றன. மனைவி கணவனொடு இறத்தல், காதலியை இழந்த காதலன் மீண்டும் மணம் செய்யாது தனித்து வாழ்தல், காதலனை இழந்த மனைவி நோன்பு மேற்கொண்டு வாழ்தல், கணவனோடு ஈம நெருப்பில் மனைவி உயிர்விடுதல், தன் மகன் படையழிந்து மாறினன் என்று கேள்வியுற்ற தாய் தன்னுயிரைவிட முனைதல் போன்ற செய்திகளை அறிவிக்கின்றன இக்காஞ்சியில் வரும் துறைகள். இனி, இறுதியாக வரும் திணை பாடாண் திணை எனப்படும். பாடாண் திணை என்பதற்குப் பாடப் படும் ஆண்மகனது ஒழுகலாறு என்பர். சிறந்தோ ரைப் பாடுதல் புலவர் இயல்பு. பாடப்படுவோர் விரும்பினும் விரும்பாவிடினும் புலவர் பாடுவார். ஆதலின் ஒருமருங்கு பற்றிய காதலாம் கைக்கிளைக் குப் புறனாயிற்று. முன்பு கூறப்பட்ட ஆறு திணை களையும் அடிப்படையாகக் கொண்டும் குற்றமற்ற காதல் பற்றியும் பாடப்படும். இஃது எட்டு வகைப் படும் என்பர். எட்டு வகையாவன நச்சினார்க்கினியர் கூற்றுப் படி பின் வருமாறு: இப்பாடாண் திணைக்கு ஓதுகின்ற பொருட்பகுதி பலவும் கூட்டி ஒன்றும், இரு வகை வெட்சியும், பொதுவியலும், வஞ்சியும், உழிஞையும், தும்பையும், வாகையும் காஞ்சியுமாகிய பொருள் ஏழுமாகிய எட்டுமாம். RF நாவலர் பாரதியார் கூற்றுப்படி கொடுப்போ ரேத்தி" என்னும் நூற்பாவால் குறிக்கப்பட்ட எட்டுமாகும்.