பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 தொல்காப்பிய ஆராய்ச்சி தேவர்களைப் பற்றிப்பாடும் அறுமுறைவாழ்த்து அல்லது போர் வீரர்களைப் பற்றிப் பாடும் அறுமுறை வாழ்த்து, விரும்பிய பொருளைக் கடவுள்பால் வேண்டிக் கூறும் பகுதி, தலைவனை வாழ்த்தல், புகழ்தல் பொருந்திய பகுதி, அறம் பொருள் இன்பம் சார்பாக முன்னோர் கருத்துரைக்கும் பகுதி முதலி யனவும் பிறவும் எல்லாம் பாடாண் பகுதிகளே. இவைகளில் சில இசைப்பாக்களாலும் இயற்றப் படும். குழவியிடத்து அன்பு தோன்றப் பாடும் பிள்ளைத் தமிழ் வகைகளும், தலைவன் ஊர் பிறப்பு முதலிய கூறிப் புகழும் உலாவகைகளும், இத் திணையுள் அடங்கும். செய்யுள் வழக்கொடும் உலக வழக்கொடும் பொருந்தும் முறைகள் எல்லாம் கொள்ளப்படும். * கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் சுடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே. எனும் இந்நூற்பாவுக்கு உரைகள் பலவாகக் கூறப்படுகின்றன. கொடி நிலையை ஞாயிறு என்றும், கந்தழியைப் பற்றுக் கோடின்றி நிற்கும் தத்துவம் கடந்த பொருள் என்றும், வள்ளியைத் திங்கள் என்றும், கடவுள் வாழ்த்தை அமரர் வாழ்த்து என்றும் நச்சினார்க்கினியர் கூறுகின்றார். நாவலர் பாரதியார் அவர்கள் 'கந்தழி ' என்னு மிடத்துக் காந்தள் என்றே இருக்க வேண்டுமென்று கூறி, கொடிநிலை' என்பதற்குக் கொடி பிடித்துச் செல்லும் நிலை என்றும், காந்தள் என்பதற்கு வெட்சி வகை முருகக் கடவுள் வாழ்த்து என்றும், வள்ளி என்பதற்குப் பெண்டிர் முருகக் கடவுளைப் பாடும் வள்ளி யென்னும் வாழ்த்து என்றும் கூறிப் போர்த்