பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 241 7. உவம இயல் தம் உள்ளத்தெழுந்த கருத்துக்களைச் சிதை வின்றி உள்ளத்து எழுந்தவாறே பிறர்க்கு அறிவிக் கும் ஆற்றல் உள்ளவரே சிறந்த புலவராவார். அவ் வாறு அறிவிப்பதற்கு உறுதுணையாய் நிற்பனவற் றுள் அணியும் ஒன்றாகும். அணிகளுள் தலைமையா னது உவமையாகும். ஒன்றை அறியாதார்க்கு அதனை அறிவிக்க விரும்பும் புலவர், அறிந்த ஒன்றோடு ஒப் பிட்டு அறிவிக்க முயல்கின்றார். ஒன்றனோடு ஒன்றை ஒப்பிட்டுக் காணுதலே உவமையணியாகும். இவ்வு வமை அணிகளிலிருந்தே பிற அணிகள் எல்லாம் தோன்றியுள்ளன. ஆதலின் ஆசிரியர் தொல்காப்பி யர் அணிகளின் அன்னை எனப்படும் உவமை பற்றி விளக்குகின்றார். ஒன்றனைப் பிறிதொடு ஒப்பிட்டுக் கூறுங்கால் வினை, பயன், மெய், உரு என்ற நான்கின் அடிப் படையில் ஒப்பிடப்படும். ஆதலின் உவமை நான்கு வகைப்படும். புலியன்ன வீரன்' என்று கூறுங்கால் பாய்வ தில் வீரன் புலியைப்போல் பாய்வான் என்பதாம். இது வினை உவமமாகும். மாரியன்ன பாரி' என்னுங்கால் பாரி மழையைப் போல் பயன் கருதாது கொடுக்கக் கூடியவன். அடை 16-1454