பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 தொல்காப்பிய ஆராய்ச்சி கன். திரைக் காட்சி இயக்குநர்கள் இவைகளைக் கற்றுப் படங்களை இயக்குவரேல் அப்படங்கள் உண் மையொடு பொருந்தியனவாய் யாவராலும் பாராட் டப்படும் என்பதில் எட்டுணையும் ஐயமின்று. இலக்கிய மாந்தர்கள் உள்ள உணர்ச்சியால் உந் தப்படுகின்ற காலை எவ்வாறு சொல்லோவியப் படுத் துதல் வேண்டும் என்பதற்கு மெய்ப்பாட்டியல் மிக வும் துணைபுரியும். இவ்வகையான ஆராய்ச்சி வேறு எம்மொழிகளிலும் இல்லை என்றே கூறலாம். வட மொழியில் நடனம் பற்றிய மெய்ப்பாடுகள் கூறப்பட் டுள்ளன. அவையும் தமிழ் நூல்களைப் பின்பற்றிய னவேயாம். இலக்கியப் படைப்புக்கும் இலக்கிய ஆராய்ச்சிக்கும் உரியனவாகக் கூறப்பட்டுள்ள மெய்ப்பாடுகள் பற்றிய இவ்வியல் முழுதும் கிடைக் கப் பெற்றிலதோ என்று ஐயுற வேண்டியுள்ளது- ஒவ்வொரு இயலிலும் சொல்ல எடுத்துக்கொண்ட பொருளைப் பற்றிய விளக்கம் கூறிய பின்னர், வகை கூறத் தொடங்குவது ஆசிரியர் தனிச் சிறப்பு. இவ் வியலில் அவ்வாறு கூறப்பட்ட நூற்பா காணப்பெற வில்லை. கரையானுக்கு இரையாகி விட்டது போலும். உண்மைக் காதலுக்குரிய ஒப்புமைப் பகுதிகளும் உண்மைக் காதலுக்கு வேண்டாத பகுதிகளும் வரை யறுத்துக் கூறப்பட்டுள்ளன. காதல் மணம்புரிய விரும்புவோர் உளத்தில் கொள்ள வேண்டியவை அவை. இம்மெய்ப்பாட்டு ஆராய்ச்சியானது கண்டும் கேட்டும் அறியும் உணர்வுடைய மாந்தர்க்கே முற்றி லும் உரியதாகும். உணர்வுடை மாந்தராய் தமிழி லக்கியச் சுவையை நுகர்ந்து இன்புறல் தமிழ் மாந்தர் கடனாகும்.