பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 243 யிட்டுக் கூறல் இயலும். ஆதலின் இவை நான்கையும் உவமை தோன்றுதற்குரிய நிலைக்களன் என்றனர். இழிபு காரணமாகவும் ஒப்புமை தோன்றலாம். பொருள்களை முதல் என்றும் சினை என்றும் பாகு படுத்துவதுண்டு. உவமிக்குங்கால் முதற் பொரு ளோடு முதற்பொருளும் சினைப் பொருளோடு சினைப் பொருளும் உவமிக்கப்படல் வேண்டும். இருந்தாலும் காலப் போக்கில் முதலுக்குச் சினையும், சினைக்கு முத லும் உவமைப் பொருளாக வந்துள்ளன. ஆகவே எத னோடு எதனை உவமித்தாலும் மரபு கெடாமல் உவ மித்தல் வேண்டும். உவமை கூறுங்கால் இரண்டுக்கும் (உவமைக் கும் பொருளுக்கும்) உள்ள பொதுப் பண்பை எடுத் துக் கூறியும் உவமிக்கலாம்; எடுத்துக் கூறாதும் உவமிக்கலாம். பவளம் போன்ற சிவந்த வாய் என்று கூறும்போது பவளத்திற்கும் வாய்க்கும் உள்ள பொதுப்பண்பாம் சிவப்பு நிறம் எடுத்துக் கூறப்படு கின்றது. அவ்வாறு இன்றி பவளவாய் என்றும் கூற லாம். ஒப்புமை என்ன என்பதை உய்த்துணர்ந்து கொள்ளலாம். இது சுட்டிக்கூற உவமம் எனப் படும். உவமை கூறுங்கால் உலகத்தார் உள்ளங் கொண்டு மகிழுமாறு கூறுதல் வேண்டும். ஒப்புமை தானே என்று எதற்கும் எதனையும் கூறிவிடுதல் கூடாது. மயில் தோகை போலும் கூந்தல் என்பது தான் பொருந்துமேயன்றி காக்கைச் சிறகன்ன கரு மயிர் என்பது பொருந்தாது. ஒற்றுமைக்குப் பாலும் நீரும்போல் என்பதுதான் பொருந்துமேயன்றி 'காஃ பியும் டிக்காசனும்' என்பது பொருந்தாது. இரு என்ன கருங்கூந்தல் என்பது பொருந்துமேயன்றி தார் அன்ன கூந்தல் என்பது பொருந்தாது.