பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 தொல்காப்பிய ஆராய்ச்சி நூல்களைப் பற்றியும் அவற்றின் வகை பற்றியும் செய்யுளியலில் ஆசிரியர் கூறுகின்றார். கூற வேண்டுவனவற்றை ஆங்கே கூறாமல் மரபியலில் கூறத் தலைப்பட்டதன் பொருத்தம் விளங்கவில்லை. உலகியல் மரபினையும் செய்யுளியல் மரபினையும் இங்கு விளக்குகின்றார் என் உரையாசிரியர்கள் உள்ளதற்கு அமைதி கூறும் வகையில் உரைத் துள்ளனரேனும் நுணுகி ஆராய்வார்க்கு உண்மை வெளிப்படுத்தலில் தவறாது. 'சூத்திரம்' என்ற சொல்லும் 'உத்தி' என்ற சொல்லும்தாம் இடையில் புகுத்தப்பட்ட தன்மையை எளிதே புலப்படுத்துகின்றன. ஆதலின் நூறு முதல் நூற்றுப் பன்னிரண்டு முடிய உள்ள நூற்பாக்கள் ஆசிரியருடையனவல்ல என்பது அங்கை நெல்லிக் கனிபோல் விளங்குகின்றது. நூற்பாவின் இறுதியில் நூலின் புறனடையாக உரைக்கப்பட்டிருப்பது ஏனைய புறனடைகளோடு ஒப்பிடுமிடத்துத்தான் பின் வந்த பேதைப் புலவன் படைப்பெனப் பேசா நிற்கின்றது. இனி எஞ்சியுள்ள நூற்பாக்களால் அறியத் தக்கன. நிற்பன, நடப்பன,பறப்பன பற்றியும் அறிவு வளர்ச்சியால் உயிர்களின் வகை பற்றியும் ஆம். நிற்பன பற்றியும் நடப்பன பற்றியும் விரிவாக ஆராய்ந்துள்ள அளவு பறப்பன பற்றி விரிவாக ஆராய்ந்திடக் காணோம். ஆராய்ந்த பகுதி அழிந்து விட்டது போலும். . 'மரபு' என்பது தொன்று தொட்டு வருவது. அறிவான் உயர்ந்தோரால் உண்டாக்கப்பட்டு வழங்கி வருவதாகும். மொழியை உருவாக்கு கின்றவர் புலவரும் பொதுமக்களும். பொது