பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 273 ஆங்கில மொழியில் அடியிறுதியில் ஒரே எழுத்தே வருமாறு இயற்றுதல் போலத் தமிழிலும், அடிகள் தோறும் ஒரே எழுத்துப் பயின்றுவரப் பாடுதலும் இயைபாகும். 7. புலன்: மக்களுக்கு விளங்கும் முறையில் அவர்கள் உரையாடுகின்ற வழக்கு மொழியில் கொச் சைச் சொல், இழிவழக்கு முதலியன இன்றி வெளிப் படையாகப் பொருள் தோன்றும் வகையில் இயற்றப் படுவது புலன் ஆகும். தொல்காப்பியர் காலத்தில் பலர் சேர்ந்து வாழும் இடம் சேரி எனப்பட்டது. பிற்காலத்தில் சில வகுப்பார் வாழுமிடத்தைச் சுட்டு வதற்கு மட்டும் பயன்பட்டு விட்டது. 'சேரி மொழி' என்று இந்நூற்பாவில் சுட்டப்படுவது வழக்கு மொழியாகும். மொழியை வழக்கு மொழி என்றும், செய்யுள் மொழி என்றும் ஆசிரியர் பகுத்துக்கொண்ட லான் இங்கு வழக்கு மொழியால் மட்டும் நூல் இயற்றுவதைக் குறிப்பிட்டுள்ளார். செய்யுள் மொழி யால் செய்யப்படுவதை 'அழகு' என்று குறிப்பிட்டுள் ளமை போல வழக்கு மொழியால் செய்யப்படுவதைப் புலன் என்றார். புலன் பொது மக்களுக்காகச் செய்யப் பட்ட நூல் போலும். 'விளக்காதார் கூத்து' என் னும் நாடக நூலைப் பேராசிரியர் எடுத்துக்காட்டாகக் கூறுவதிலிருந்தும் புலன் பொது மக்களுக்கு உரியது என்று கொள்ளலாம். இன்று ஆங்கிலத்தில் பொது மக்களுக்கு என எளிய மொழியில் நூல்கள் வெளி வருகின்றமை போல அன்று தமிழகத்திலும் எளிய தமிழில் நூல்கள் வெளி வந்தன போலும். 8. இழைபு: வல்லெழுத்துக்கள் ஒற்றும் உயிர் மெய்யுமாக வந்து - தனி வல்லெழுத்துக்களாக வந்து 17A-1454