பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 தொல்காப்பிய ஆராய்ச்சி உரையொடு கலந்த என்று பொருள் கொண்டு விட்டார். 4. தோல்: மென்மை மிக்க இனிய சொற்களால் வாழ்வுக்குச் சிறப்புத்தரும் பொருள்கள்பற்றி இயற் றப்படும் நூலும், சுருங்கச் சொல்லலின்றி, விரித்துச் சொல்லிப் பல அடிகளால் இயற்றப்படும் நூலும் இவ் வனப்புக்குரியன. பத்துப் பாட்டும், சிலப்பதி காரமும் போன்றன எடுத்துக் காட்டுக்கள் ஆம். தொன்மொழிப் புலவர் கூறுவர் என்று நூற்பாவில் வருகின்றது. பழமையான மொழி நூலறிஞர் என்று பொருள் கொள்ளாது பழைய கதையைச் செய்தல் பற்றித் தொன்மொழி என்றார்" என்று பேராசிரியர் கூறியுள்ளார். கதைதான் கூறவேண்டுமென்ற குறிப்பு நூற்பாவில் இல்லை. " 5. விருந்து: புதியனவாகப் பாக்களால் இயற்றப் படும் நூல். பழைய முறையில் மட்டும் இயற்றினால் இலக்கிய வளர்ச்சி சிறப்புறாது. புதுப்புது முறை களும் பொருள்களும் பொருந்தும் இலக்கியங்களும் இயற்றப்படல் வேண்டும்; பண்டு இயற்றப்பட்டன. இன்று போற்றுவார் இலரே. முத்தொள்ளாயிரம், அந்தாதி, கலம்பகம் முதலியன மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ளன. 6. இயைபு : ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள, என்ற பதினோரு மெய்யெழுத்துக்களுள் ஏதேனும் ஒன்று தொடர்ந்து காதை முடிவில் நிற்க நூல் இயற்றுவது. மணிமேகலையை நோக்கின் காதை தோறும் 'ன்' என்று முடிவதைக் காணலாம். ஞ்,ந், வ், என்பன சில சொற்களில்தான் இறுதியாக வரும். அவையும் இக்காலத்து வழக்கொழிந்து விட்டன.