பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தொல்காப்பிய ஆராய்ச்சி மேயாம். குற்றியலிகரம், குற்றியலுகரம் என இரண் டிற்கும் தனியான வரி வடிவங்கள் இல்லை. தொல் காப்பியர், பன்னிரண்டு உயிரும் பதினெட்டு மெய் யும் என முப்பது முதன்மை ஒலி வடிவங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் சொற்களுள் எழுத்துக் கள் ஒன்றோடொன்று சேருங்கால் சில ஒலி வடிவங் கள் உருவாகின்றன. க, ச,ட,த,ப என்பனவற்றிற்கு முன்னால் அவை களுக்குரிய மெய்யெழுத்துக்கள் வருங்கால் வேறு பட்ட ஒலியை அடைகின்றன. பக்கம்-பங்கு. கச்சு- கஞ்சி, கட்டு-கண்டு, பத்து-பந்து, அப்பன் - அம்பு என்பனவற்றுள் இவ்வொலி வேற்றுமையைக் காண லாம், ங்கு (g), ஞ்சி (i),ண்டு (d), ந்து (dh), ம்பு (b) எனும் ஒலிகட்கு வரி வடிவங்கள் இல்லை. 'க' : அகம், முகம், ஆகம் எனும் சொற்களில் வரும் காவும் ' எஃகு' போன்ற சொற்களில் ஆய்த எழுத்தை அடுத்துவரும் காவும் ஒருவித மெல்லோசை பெறுகின்றது. இது ஆங்கில 'h'க்கு ஒப்பாகும். 'ச' : பசி, ஊசி போன்ற சொற்களுள் ச மெல்லோசை பெற்று ஆங்கில 'ஓ'க்கு ஒப்பாகும். 'ட்'க்குப்பின் எழுதப் பெற்றால் 'Bh ஒலியைப் பெறுகின்றது:காட்சி. 'ட்': கட்டி, பட்டி போன்ற சொற்களுள் ஆங்கில 't'க்கு ஒப்பான ஒலி பெறுகின்றது. 'ப்': ஆய்தத்திற்குப் பின் எழுதப்படின் ஆங்கில f" ஒலியைப் பெறுகின்றது: அஃப. இவைகட்கும் வரிவடிவங்கள் இல்லை. இருபத்தெட்டு (18+10) ஒலி வடிவங்கட்குப் பதினெட்டு வரி வடிவங்களே மெய்யினத்தில் இருக்கின்றன. இவ்வகையில், தமிழ் குறைபாடுடையதுதான் கூறுவாருமுளர். என்று