பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை தமிழர்களின் இரு கண்களென்ப் போற்றற் குரியன திருச் குறளும் தொல்காப்பியமும், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து அறம் பொருள் இன்பம் அடைதற்குரிய வழிகளை அழகுற நுவல் வது திருக்குறள். பண்டைத் தமிழர்கள் தூய நல்லறத்தைத் துணை யாகப்பெற்று வாழ்ந்த முறையையும், வாழ்வின்பம் துய்த்தற்குச் சிறப்புறு கருவியாய்த் துணைபுரிந்த தமிழ் மொழியின் இயல்பை யும் எடுத்துக்காட்டி இசைப்பது தொல்காப்பியம். திருக்குறளை மூல நூலாகவும், எளிய பொழிப்புரையுடன் பொருந்திய நூலா கவும் முதற்கண் வெளியிட்டோம். திருக்குறளைப் பலர் பல முறைகளில் வெளியிட்டு வந்திருக் கின்றனர்; இன்று திருக்குறள் மக்களிடையே செல்வாக்குப் பெற்று உலவி வருகின்றது. ஆனால் திருக்குறளுக்கும் அன்னையாய் விளங்கும் தொல் காப்பியத்தைப் புலவர் அல்லாதார் இன்னும் அறிந்திலர். தொல் காப்பியம் இலக்கணமாக இலங்குவதோடு, மொழி நூலாகவும். இலக்கிய ஆராய்ச்சிக் கருவி நூலாகவும் அமைந்துள்ளது. இது தமிழர்களும், தமிழர்களைப்பற்றி அறிய விரும்புவோரும் தவறாது கற்றறிய வேண்டிய தனிப்பெரும் நூலாகும். இந்நூலறிவு தமிழர்கட்கு உண்டாக வேண்டும். இந்நூலைப் போற்றிப் படிக்கும் ஆர்வம் தமிழர் உள்ளத்தில் நிலைபெற்றோங்க வேண்டும். தொல்காப்பியத்தைப் பல்காற் பயின்று பயனிலவே' என்று எண்ணும் நிலை மாறுபடல் வேண்டும். ம்