பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து 63 மாத்திரைகட்கு மேலும் நீண்டு ஒலிக்க வேண்டு மென்றால் வேண்டிய மாத்திரைகளின் அளவுகட் நெட்டெழுத்துகட்கு இனமான குற்றெழுத்துக்களைக் கூட்டிக் கொள்ளல் வேண்டும். கேற்ப ஆ இரண்டு மாத்திரைகளை உடைய நெட் டெழுத்து, நான்கு மாத்திரைகள் அளவு ஒலிக்க வேண்டுமென்றால் 'ஆஅஅ' என இரண்டு குற்றெ ழுத்துக்களைச் சேர்த்துக்கொள்ளல் வேண்டும். ஓர் எழுத்துத் தனியாக நின்று இரண்டு மாத்திரைகட்கு மேல் ஒலிப்பது இல்லை. என்றும், " மூவளபு இசைத்தல் ஓரெழுத்து இன்றே "நீட்டம் வேண்டின் அவ்வள புடைய கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்' என்றும் கூறினார். ஆனால் பின்னூலாக வந்த நன் நூலை இயற்றிய பவணந்தியாரோ. தொல்காப்பியர் கூற்றினின்றும் மாறுபட்டுக் கூறியுள்ளார். நெட்டெ ழுத்தே தன் மாத்திரையின் மிக்கு ஒலிக்கும் என்றும் அவ்வாறு மிக்கு ஒலித்ததன் அடையாளமாக நெட்டெழுத்தின் இனமான குறில் எழுத்து வரும் என்றும் கூறியுள்ளார். உயிர் அளபெடைக்கு மூன்று மாத்திரை என்றும் வரையறுத்து விட்டார். இவ்வாறு கூறியதன் காரணம் தமிழ் அளபெடையும் வடமொழிப் புலுதமும் ஒன்று என்று பிறழ உணர்ந் ததனால் ஆகும் என்று சுப்பிரமணிய சாத்திரியார் கூறியுள்ளார். வடமொழிப் புலமை தமிழ் மரபை அழித்துள்ளமைக்கு இஃது ஓர் எடுத்துக் காட்டாகும். எழுத்துக்கள் ஓசை குறைந் தும் மிகுந்தும் ஒலிக்கும் இடங்கள் நுண்ணிதின் ஆராய்ந்து வகைப்படுத்திக் கூறியுள்ள தொல்காப் பியரின் மொழி நூற் புலமை யாவரானும் போற்று