பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து 71 5. வேறினப்படுதல் (Dissimilation) முள்+தீது: முஃடீது. 6. ஓரின ஒலிகுன்றல் (Haplology) ஆதன் + தந்தை : ஆந்தை. 7. ஒலியிடை மாறுதல் (Metathesis) சிவிறி : விசிறி. 8. தடுமாறு புணர்ச்சி (Metanalysis) அவனு மக்கு : அவன் நுமக்கு என்று பிரித்தற்கு மாறாக அவன் உமக்கு என்று பிரித்து விட்டனர். 9. ஒலி நயம் குறித்து உயிர் ஒருவகைப் படுதல் (Harmonic sequence of vowels): உப்பின்றி புற்கை உண்க : உப்பின்று புற்கை உண்க : ' இன்றி என்பதன் இறுதியில் உள்ள இ முன்னும் பின்னும் வந்துள்ள உகரங்களால் 'உ வாக மாறி விட்டது. 2 10. மொழி இறுதி தோன்றல் (Paragoge) ஏம்: ஏழு. இவைகள் எல்லாம் தமிழினும் உண்டு. இவை யன்றிப் பிறவும் உண்டு. வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்தின் வழக்கும் செய்யுளும் ஆராய்ந்து வகையுறக் கூறியுள்ள அழகே அழகு. சொற்றொடர்களில் சொற்கள் ஒன்றோடொன்று சேர்வதனால் உண்டாகும் ஒலி மாற்றங்களை ஆறு. இயல்களால் விரித்துக் கூறுகின்றார். புணரியல் என்ற தலைப்பில் சொற்புணர்ச்சி பற்றிய பொது விதிகளை அறிவுறுத்துகின்றார். ஒரு சொற்றொடரில் பல சொற்கள் இருப்பினும் இவ் விரண்டாகவே சொற்கள் சேரும். முதலில் நிற்பது நிலை மொழி என்றும் அதனுடன் வந்து சேர்வதை