பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • 76

தொல்காப்பிய ஆராய்ச்சி நெறி முறைகளைக் கொண்டனவற்றை யெல்லாம் தொகுத்துக் கூறுகின்றார். உருபியலில், சொற்களோடு உருபுகள் வந்து சேருங்கால் உண்டாகும் மாற்றங்களை விளக்கு கின்றார். பெயரும் வேற்றுமையுருபும் சேருங்கால் இரண்டும் ஒற்றுமையுறப் பொருந்தி இன்னோசை பட ஒலிப்பதற்கு எழுத்தோ சாரியையோ இடையில் சேர்தல் வேண்டியுள்ளது. மரம்+ஐ - மரத்தை (மரம்+அத்து+ஐ). மரம் என்ற பெயருடன் இரண்டாம் வேற்றுமையுருபு 'ஐ' சேருங்கால் 'மரமை' என்று கூறுதல் இல்லை. 'மரத்தை' என்றுதான் கூறுகின்றோம். இடையில் 'அத்து' என்ற சாரியை வந்துள்ளது. இவ்வாறு வரும் சாரியைகளைப் பற்றியும் வேற்றுமையுருபுகளை ஏற்குங்கால் பெயர்கள் அடையும் மாற்றங்களையும் தெளிவுறக் கூறுவதே உருபியல் என்று உணர்தல் வேண்டும். உயிர் மயங்கியல், நிலைமொழியிறுதியில் உயிர் எழுத்துக்கள் நிற்குங்கால் வருமொழி முதலில் மெய் எழுத்துக்கள் இருந்தால் சொற்றொடரில் உண்டாகும் மாற்றங்களை அறியலாம். உயிர்களோடு மெய்யெழுத்துக்கள் கலந்து தொடர் அமைவதால் உயிர் மயங்கியல் என்று பெயரிடப்பட்டுள்ளது. மயங்குதல் என்றால் கலத்தல் என்று பொருள்தரும். இங்கு. அ' விலிருந்து 'ஔ'காரம் இறுதியாக ஒவ்வொரு உயிர்க்குப்பின்னால் சொற்கள் வந்து சேருங்கால் எவ்வாறு சேருகின்றன என்பது தெளி வுறக் கூறப்பட்டுள்ளது. உயிர்க்குப் பின்னால் உயிர் வந்தால் உடம்படு மெய் பெறும் என்று புணரியலில் கூறிவிட்டமை யான் இங்கு உயிர்க்குப் பின்னால் மெய்கள் வரும் முறை பற்றியே ஆராய்ந்து கூறப்படுகின்றது.