பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து 75 doubtless a result of the progressive refinement of the language - Comparative grammar-page 174) இன்று இம்முறை தமிழ் மொழிக்குரிய இயற்கை இயல் பாகிக் கல்லாதாரும் உடம்படு மெய்யுடன் உரை யாடக் காண்கிறோம். வரவில்லை (வர+இல்லை), செய்யவில்லை (செய்ய + இல்லை ) என்பனவற்றை நோக்குங்கள். சொற்களைச் சொல்லுங்கால் குரல் வேறு பட்டால் பொருள் உணர்த்தும் முறை எல்லா மொழி களிலும் காணப்படும். 'நீ உண்பாய்' என்னுங் கால் எடுத்தலோசை படக் கூறினால் கட்டளைப் பொருளும் படுத்தலோசையாற் கூறினால் வேண்டுதல் பொருளும் வெளிப்படுவதைக் காண லாம். 'அசை யழுத்தம் (Acvent) தமிழிலும் உண்டு. சொற்றொடர்களில் எழுத்துக்கள் ஒரேவகையாக அமைந்திருந்தாலும் ஓசை வேறுபாட்டால் பொருள் வேறுபடும். "எழுத்தோர் அன்ன பொருள் தெரிபுணர்ச்சி, இசையில் திரிதல் நிலைஇய பண்பே" செம்பொன் பதின் தொடி' என்ற தொடரினை செம்பு ஒன்பதின் தொடி' எனவும் 'செம்பொன் பதின்தொடி' எனவும் ஓசையறுத்துக் கூறுங்கால் பொருள் வேறுபடுவதை அறியக்கூடும். . 'குன்றே றாமா என்பதனைக் 'குன்று எறா மா எனப் பிரிப்பின் மலையின் மீது ஏறாத விலங்கு' எனவும் குன்றோறா மா' எனப் பிரிப்பின் 'விலங் குகள் (இப்பொழுது) மலையின் மீது செல்லா' எனவும் பொருள்படும். . • தொகை மரபு' என்ற இயலில் பின்வரும் இயல்களில் கூறவேண்டுவனவற்றுள் பொதுவான