பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் 85 ராம் வெண்டிரிசும் கூறியிருப்பது தொல்காப்பியரின் மொழி நூற் புலமையைப் புலப்படுத்துவதாகும். (Pursuing the process of elimination, we end by leaving intact only two parts of speech the noun and the verb) இச்சொற்கள் பற்றிய வரலாறு திணை, பால், எண். இடம், வேற்றுமை, காலம் என்பனவற்றுள் அடங்கும். வேறு திணை என்ற பிரிவு தமிழுக்கே உரியது: எம்மொழியினும் காணப்படாதது; திணை இரண்டு வகைப்படும்; உயர்திணை, அஃறிணை. மக்கள் உயர் திணை; மற்றவை அஃறிணை.

  • உயர் திணை என்மனார் மக்கட் சுட்டே

'அஃறிணை என்மனார் அவரல பிறவே ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே. பால் ஐந்து வகைப்படும்; ஆண், பெண், பலர் என்பன மூன்றும் உயர்திணைக்குரிய ; ஒன்று பல என்பன இரண்டும் அஃறிணைக்குரியன. தமிழில் திணை, பால் கொள்ளும் முறை மிக எளிமையானது: இயற்கை நெறியை ஒட்டியது. இந்தோ ஐரோப்பிய மொழிகள் பல, உயிருள்ளன. உயிரில்லன அனைத்தையும் உயர்திணையாகவே கொண்டு ஆண் பெண் என்ற இரு பிரிவுக்குள் அடக்கி விட்டன. சித்திய மொழிக்குழுவினுள் பல எல்லாவற்றையும் அஃறிணையாகவே கொண்டு ஒன்று.பல என்ற இரு பாலுக்குள் அடக்கிவிட்டன. தமிழ் ஒன்றுதான் பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுத்து அதனையுடைய மக்களை உயர்திணையெனக்