பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் வேற்றுமை; 89 பெயர்ப் பொருளை வேறுபடுத்துவது வேற் றுமை. ஆகவே வேற்றுமை பெயர்க்குரிய இயல்பு களுள் ஒன்றெனக் கருதப்பட்டது. சொற்றொடர் (Syntax) மரபுகளைக் கிளவியாக்கத்தில் கூறிய தொல் காப்பியர், சொற்றொடர் அமைப்புக்குப் பெரிதும் இன்றியமையாததான வேற்றுமையை அடுத்துக் கூறுகின்றார். தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு தமிழில் ஏழு வேற்றுமைகளே கொள்ளப்பட்டன. விளி வேற்றுமையை (எட்டாம் வேற்றுமையை)த் தனி யாகக்கொண்டு ஆராய்ந்து வந்துள்ளனர். தொல் காப்பியர்தாம் விளியையும் சேர்த்து வேற்றுமை எட்டெனக் கூறியுள்ளார். "வேற்றுமை தாமே ஏழென மொழிப” " விளிகொள் வதன்கண் விளியோடு எட்டே” என்ற நூற்பாக்கள் தெள்ளிதின் உணர்த்துகின்றன. தொல்காப்பியர் விளி மரபு என்ற பெயரால் தனி இயலில் எட்டாம் வேற்றுமையை விளக்குவதிலிருந்து அது தமிழில் பெற்றிருந்த முதன்மையை அறியலாம். வேற்றுமை இயல், வேற்றுமை மயங்கியல், விளி மரபு என மூன்று இயல்களால் வேற்றுமை ஆராயப்படுவதிலிருந்து மொழி அமைப்பிற்கும் வழக் கிற்கும் வேற்றுமை எவ்வளவு வேண்டற்பாலது என்பதனைத் தெள்ளிதின் அறியலாகும். மொழியின் செம்மைக்கும் கருத்து விளக்கத்திற்கும் துணையாய் உள்ள வேற்றுமை பற்றிய ஆராய்ச்சி தமிழில் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தோன்றி ஒழுங்குற வளர்ந்துள்ளது.