பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
xi

இதுகாறும் ஆய்ந்தவாற்றான் தொல்காப்பியர் குறிப்பிட்ட சின் என்பதே அசைசொல் என்பதும், இசின் என்பதைப் பின்னுனோர் கொண்டனர் என்பதும் அறியபெறும்.

2 சந்தி சேர்த்தெழுதுதல்

தமிழ்மொழிக் குள்ள சிறப்புக்களிலொன்று சந்தி சேர்த்தெழுதுதலாகும். செடட்களிற் சந்தி பிரித்தெழுதின் செய்யுளோசை கெடும் என்பது தெரிந்ததே. படித்தற் கெளிமையாக விருத்தல் வேண்டுமென்று கருதியும், பொருளெளிதின் விளங்குதற் பொருட்டும் பிரித்தெழுதுகிற முறை இற்றை ஞான்று செய்யுளிலும் பெரும்பான்மை புகுந்துள்ளது. சில சொற்றொடர்களை இலக்கண விதிக்கு மாறாகப் பொருத்தலு மாங்காங்குக் காணப்பெறுகிறது. ஆகவே பாடவேறுபாடுகளெனக் காணப்படுபவற்றுட் சில யெவ்வாறு புனர்க்கப் பெற்றிருத்தல் வேண்டுமென்ப திங்காய்வு செய்யப் பெறும்.

அ. ஏமுனிவ் விருமையும்

தொல்காப்பியர், "உடம்படு மெய்யி லுருபுகொளல் வரையாா" என்று பொதுவாகக் கூறினார். எவை உடம்படு மெய்யாக வரும் என்பதை அவர் வரையறுத்துக் கூறவில்லை. பவணந்தியே, "இ எ. ஐவழி யகரமும் ஏனை யுயிர்வழி வகரம் ஏமுனிவ் விருமையும்" வரும் என்றார்.

ஏகாரம் நிறுத்த சொல் அல்லது நிறுத்த சொல்லின் ஈறாகிக் குறித்து வரு கிளவியின் முதலெழுத்து உயிராயின் யகரம் அல்லது வகரம் உடம்படுமெய் ஆகும் எனபது நன்னூல் கருத்து. சான்றோர் செய்யுட்களிலும் இவ்வாறு பயிலும். எனினும் ட கரம் எங்கு வரும், வகரம் எங்கு வரும் என்பதை ஆய்ந்தறிய வேண்டியுளது.

கூர்ந்து நோக்கின் இடைச்சொல் ஓகாரத்துக்கு முன் யகரமும, பெயர்ச்சொல் ஏகாரத்திற்கு முன் வகரமும் வருதல் அறியப்பெறும்.

அவனே யடித்தான். உகப்பே யுயர்தல் (789) - இடைச்சொல் ஏ முன் யகரம்.

சேவுகைத்தவன், சேவென் மரப்பெயர் : 279) - பெயர்ச்சொல் ஏமுன் வகரம்

அச்சிடப் பெற்றுள்ள தொல்காப்பியப் பதிப்புக்களில் இவை எவ்வாறு அமைந்துள்ளன எனக் காண்போம்.