பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேற்றுமை மயங்கியல் 115 பா.வே. 1. பொருள்வயின் - 76 தவிர எல்லாப் பதிப்புகளும், 41A ஒன்று தவிர எல்லாச் சுவடிகளும். பொருண்மை என்பது இளம்பூரணர் பாடமென்பது அவர் உரை யால் தெரிய வருகிறது. காலப்பழமை நோக்கி இப்பதிப்பில் ஏற்கப்படுகிறது. 602-118 "வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும் 3,3 603-119 அளவு நிறையு மவற்றொடு கொள்வழி(ய்) உளவென மொழிப வுணர்ந்திசி னோரே' 34 பா.வே. 1. வுணர்ந்துசினோரே - சுவடி 115 தி > து வுணர்த்துசினோரே - பதிப்புகள் 49, 80 அச்சுப்பிழை. பதிப்பு 49ல் சு.வே.யாக உணர்த்திசினோரே என்பது கொடுக்கப்பட்டதால் இது பாடமன்மை தெளிவாகிறது. 6.04-120 கிளந்த வல்ல வேறுபிற தோன்றினுங்' கிளந்தவற் றியலா னுணர்ந்தனர் கொளலே’. 35 பா.வே. 1. பிறிதொன்றினுங் - சுவடி 48. பதிப்பு 76இல் சு.வே. 2. கொள்க, கொளவே - பதிப்பு 49 சு.வே. வேற்றுமை மயங்கியல் முற்றும். + "இதனைப் பிரித்து இரு தத்திரமாக உரைத்தாரால் உரையாசிரியர் எனின் அங்ங்ணம் பிரிப்பின் தம்மொடு சிவனலும் பிறிதுபொருள் சுட்டலுமாகிய இவற்றது வேறுபாட்டின்கண் என்பது இனிது பெறப்படாமையானும், எழுத்தோத்தினுள் புள்ளியிறுதியும் உயிரிறுகிளவியும் (தொல். 157) என்னுஞ் சூத்திரத்து இந்நிகர்ப் பாதுகாவலைப் பிரியாது ஒன்றாகவே யுரைத்தலானும் அவர்க்கது கருத்தன்று என்க: சேனா.