பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளிமரபு 13 I 634-150 முறைப்பெயர்க் ' கிளவி முறைப்பெய ரியல. § 0. பா.வே. 1. முறைப்பெயற் - சுவடி 951 எழுத்துப்பிழை. 635-151 சுட்டுமுதற் பெயரும் வினாவின் பெயரும் முதற்கிளந் தன்ன வென்மனார் புலவர். 31 636-152 "அளபெடைப் பெயரே யளபெடை யியல. & 2. 637-153 கிளந்த விறுதி' யஃறிணை விரவுப்பெயர்* விளம்பிய நெறிய விளிக்குங் காலை 33 பா.வே. 1. விறுதியோடு - சுவடி 73. பிழை. உடனிகழ்ச்சிப்பொருள் இன்மையின். 2. கிளற்றிய - சுவடி 48. எழுத்துப்பிழை. த்தி > ற்றி 3. நெறியின் - பதிப்பு 76இல் சு.வே. 638-154 புள்ளியு முயிரு மிறுதி யாகிய(வ்) அஃறிணை மருங்கி னெல்லாப் பெயரும் விளிநிலை பெறுஉங் காலந் தோன்றின்' தெளிநிலை யுடைய வேகாரம் வரலே. 34 பா.வே. 1. தோன்றித் - சுவடி 951 சந்திப்பிழை. 十 சுவடி 73இல் இந்நூற்பா இடம்பெறவில்லை. இதே நூற்பா முன்னர் 18, 24ஆம் சூத்திரங்களாகப் பயின்றுள்ளன. ஒரே வடிவில் மூன்றிடங்களில் வந்திருந்தபோதும் இது ஒவ்வோர் இடத்திலும் வேறுவேறு கருத்துடன் ஆளப்பட்டதாகும். இதனைக் கூறியது கூறல் என்றோ, அல்லது முன்சுவடியில் தவறுதலாகப் பலமுறை எழுதப்பட்டுவிட்டது எனக் கருதியோ இச்சுவடி எழுத்தாளர் விட்டுச் சென்றுள்ளார். காண்க 18ஆம் நூற்பா. ப.வெ.நா. 'இந் நூற்பாவின் முதலடியைப் பின்வருமாறு சீர்ப்பிரித் தமைப்பது நேரிதெனத் தோன்றுகிறது. கிளந்த விறுதியஃ றிணைவிர வுப்பெயர் இங்ங்ணம் பிரித்தல் வகையுளியாயினும் ஒசைநயம் பெறுதலை யோதி அறிக.. கே.எம்.வி.