பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரியியல் 1 & 1 807-323 நளியென் கிளவி செறிவு மாகும். 25 808-324 பழுது பயமின்றே'. 27 சில பதிப்புகளில் இந்நூற்பாவும் அடுத்த இரண்டும் சேர்ந்து ஒரே நூற்பாவாக உள்ளது. பா.வே. 1. பயனின்றே - பதிப்பு 20, 80 பதிப்பு 38,78 இல் சு.வே. o H. H. + 809-325 சாயன் மென்மை. 28 எங்கும் மேன்மை என்னும் பொருள் இல்லை. சேனா. முற்காட்டிய நற்றிணைப் பாடலையே காட்டுகிறார். அதற்கு மென்மை என்பதே பொருள். இவற்றால் கய என்பதற்கு மென்மையான என்பதே பொருளென்றும், எங்கும் மேன்மையான என்னும் பொருளில் இலக்கிய ஆட்சி காணப்பெறவில்லை என்பதும் உறுதியாகிறது. எனவே சேனாவின் பாடமும் மென்மையும் என்றே இருத்தல் வேண்டும். முதலில் ஏட்டைப் படிஎடுத்தோர் மேன்மை என நெடிலாகக் கொண்டுவிட்டதால் இல்லாத ஒரு பாட வேறுபாடு தோன்றிவிட்டது. ப.வெ.நா. + தொல்காப்பிய உரையாசிரியர்கள் அனைவரும் இங்கு மென்மை என்றே பாடங் கொண்டுள்ளனர். காலத்தால் மிகப் பிற்பட்ட தொன்னூல் விளக்கம் 'சாயன் மேன்மை' என்று நூற்பாத் தருகிறது. இப்பாடம், கயவு சாயல் சால்புமேம் பாடென்(று) உயர்வி னான்கும் மேன்மை யாகும் (8 ஆம் தொகுதி) என்னும் திவாகரத்தின் தாக்கத்தால் நேர்ந்த வேறுபாடு. தொல்காப்பியத்தில் இந்நூற்பாவிற்கு நச்சர் எழுதியுள்ள தெளிவான உரை வருமாறு :"இது பண்பு. இதன பொருள் சாயல் மென்மை - சாயல் என்னும் சொல் மெய், வாய். கண், மூக்கு செவி என்னும் ஐம்பொறியான் நுகரும் மென்மையை உணர்த்தும் என்றவாறு. (உ.ம்) மயிற் சாயல் மகள் வேண்டிய சாயல் மாாபு நனியலைத் தன்றே என இவை ஒளியானும் ஊற்றாலும் பிறந்த மென்மை உணர்த்தின. அமிர்தன்ன சாயல் (சிந்தாமணி. 8) என்பது தன்னை நுகர்ந்தார் பிறிது நுகராமல் தடுக்கும் மென்மையை உணர்த்தவே பல மென்மையும் அடங்கின." இவ்வாறு தெளிவுபடுத்திய நச்சர் சீவக சிந்தாமணியின் எட்டாம் பாடலில் பயின்ற அமிர்தன்ன சாயல் என்னும் பகுதிக்கு உரை காணுங்கால், "சாயல் மென்மை என்று பொதுப்படச் சூத்திரஞ் செய்தது ஐம்பொறியாலும் நுகரும் மென்மையல்லாம் அடங்குதற்கு " என்கிறார். பிற்கால இலக்கியங்களும் சாயல் என்னும் சொல்லை மென்மை, அழகு என்ற பொருள்களிலேயே ஆள்கின்றதைப் பரவலாகக் காணலாம். இவற்றால் தொல்காப்பியத்தைப் பொறுத்தவரைச் சாயல் மென்மை என்பதே சரியான மூலபாடம் என்பது உறுதியாகிறது. இச்சொல்லிற்கு மேன்மைப் பொருள் மிக அருகி ஆளப்பட்டிருக்கலாம். அதனால் திவாகரம் அவ்வாறு கூற நேர்ந்தது. ப.வெ.நா.