பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் 2O7 1018-71 குடையும் வாளும் நாள்கோ ளன்றி மடையமை ஏணிமிசை மயக்கமுங் கடைஇச் சுற்றம ரொழிய வென்றுகைக் கொண்டு முற்றிய முதிர்வு மன்றி முற்றிய(வ்) அகத்தோன் வீழ்ந்த நொச்சியு மற்றதன் புறத்தோன் வீழ்ந்த புதுமை யானும் நீர்ச்செரு வழ்ந்த பாசியு மதாஅன்று ஊர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறனும் மதில்மிசைக் கிவர்ந்த மேலோர் பக்கமும்' இகன்மதிற் குடுமி கொண்ட மண்ணுமங் கலமும்' வென்ற வாளின் மண்ணோ டொன்றத் தொகைநிலை யென்னுந் துறையொடு தொகைஇ வகைநான் மூன்றே துறையென மொழிப. I3 பா.வே. 1. 5. ளன்றியும் - பதிப்புகள் 11, 22, 31 இல் சு.வே. உம்மை இன்றியமையாது வேண்டப்படுவதன்று. மிகை எனலாம். ஏணி - சுவடி 34. பிழை மிசை என்பது விடுபட்டது. நீர்ச்செழு - சுவடி 9, எழுத்துப்பிழை. ரு>ழு அகமிசைக் கிவர்ந்தோன் பக்கமு மிகன்மதிற் குடுமிகொண்ட மண்ணுமங் கலமும் - என்பது நச்சர் பாடம். அகமிசைக் - சுவடி 1, 120 அகன்மிசைக் - சுவடி 9, 53, 115 மதிமிசைக் - சுவடி 1054. லகர மெய்விடுபட்ட எழுத்துப்பிழை. கிவர்ந்தோர் - சுவடி 34 மண்ணொ - பதிப்பு 84. ஒடு என்பதே மூன்றன் உருபு என்பதால் இவர் எல்லா இடங்களிலும் அவ்வடிவத்தையே கொள்கிறார். செய்யுளோசை நோக்கிச் சில இடங்களில் ஒடு என்பதுவும் சரியான பாடமாகவே அமைகிறது. மேலும் ஒடு என்பது இலக்கண இலக்கிய ஆசிரியர்களால் பிழையெனப் புறக்கணிக்கப் பட்டதும் அன்று.