பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 பொருளதிகாரம் 11. வரிநிலை - சுவடி 1. திருமணம் செய்தலுக்கு வரைதல் என்பதே பழைய சொல்; வரித்தல் என்பது பிற்காலச் சொல். எனவே இங்கு வரைநிலை என்பதே பாடமாகக் கொள்ளல் தகும். எல்லாப் பதிப்புகளிலும் வரைநிலை என்பதே பாடம். அதனால் சுவடி இன் பாடத்தை எழுத்துப்பிழையாகக் கருதி ஒதுக்கி விடலாம். 12. மிறப்பும் - பதிப்பு 17 பிழை. உம்மை மிகை. 13. அனைநிலை - நச்சர். பால. பாடம். 14. அவன் விலங் - நச்சர். 15. வரைவுடன் பட்டோற் - நச்சர் பாடம். வரைவுடன் பட்டோர்க் - பால. பாடம். 16. வன்பொறை - சுவடி 115 17. வகையும் - நச்சர். பாடம். 1065-118 களவல ராயினுங் காமமேற் படுப்பினும் அளவுமிகத் தோன்றினுந் தலைப்பெய்து காணினுங் கட்டினுங் கழங்கினும் வெறியென விருவரும் ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும் ஆடிய சென்றுழி யறிவுதலை வரினுங் காதல் கைம்மிகக் கனவி னரற்றலுந் தோழியை வினாவலுந் தெய்வம் வாழ்த்தலும் போக்குட னறிந்தபிற் றோழியொடு கெழிஇக் கற்பி னாக்கத்து நிற்றற் கண்ணும் பிரிவி னெச்சத்து மகனெஞ்சு வலிப்பினும் இருபாற் குடிப்பொரு எளியல்பின் கண்ணும் இன்ன வகையிற் பதின்மூன்று கிளவியொடு) அன்னவை பிறவுஞ் செவிலி மேன. 25 பா.வே. 1. களவில - சுவடி 1. பிழை. பொருள் பொருத்தம் இல்லை. 2. காமமெய்ப் - நச்சர். பால. பாடம். 3. அன்புமிக - சுவடி 1, 9, 16, 53, 73, 75, 105, 115, 502, 10.54 பதிப்பு 2 பொருந்தாப்பாடம். e