பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் 2 off 4. அறிவுதலை - புலவர் குழந்தை திருத்திக் கொண்ட பாடம். 5. கைமிகக் - நச்சர். பாடம். 5. வினாதலுந் - சுவடி.115. பதிப்பு:32 வினவலுந் - நச்சர். பால. பாடம். 7. வகையால் - சுவடி 73. எழுத்துப்பிழை. யிற்>யால் 1066-119 தாய்க்கும் வரையா ருணர்வுடம் படினே' 25 பா.வே. + 1. போக்குடன் கிளப்பின்' - புலவர் குழந்தை தாமே யமைத்துக்கொண்ட புதுப்பாடம். 1057-120 கிழவோ னறியா வறிவின வரிவளென மையறு சிறப்பி னுயர்ந்தோர்' பாங்கின் ஐயக் கிளவியி னறிதலு முரித்தே 27 பா.வே. 1. னுயர்ந்தோன் - சுவடி 1054. எழுத்துப்பிழை, ர்> ன் 2. கிளவி - நச்சர். பால. பாடம். 1068-121 தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல் எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லைப் பிறநீர் மாக்களி னறிய வாயிடைப்'. பெய்ந்நீர் போலு முணர்விற் றென்ப. 28 பா.வே. 1. காலை - சுவடி 73. எழுத்துப்பிழை. ககரமெய் விடுபட்டது. 2. புறநீர் - சுவடி 103. எழுத்துப்பிழை. பி > பு டி "உணர்வுடம் படினே என்று வரும் உரையாசிரியர்கள் இருவரும் கொண்ட பாடத்துக்கு இணையாகப் போக்குடன் கிளப்பின் எனப் புலவர் குழந்தை கூறும் பாடமும் பொருள் சிறப்பின்றி அமைந்துள்ளது." வெ.ப. (பக். 204)

  • "இளம்பூரணர் உரையின் சிதைவினைக் கூர்ந்து நோக்கின் இந்நூற்பாவின் மூன்றாமடி புதுநீர் மட்கல னறிய வாயிடை எனப் பாடம் இருந்திருக்குமோ என ஐயுற வேண்டியுள்ளது." (பதிப்பு 62 பக். 829)

இளம்பூரணரின் உரையில் பிறநீர் மாக்களின் என்னும் தொடருக்கு நேரான பொருள் இல்லை. இதனையே சிதைவு என்கிறார். சுவடி 103இன் புறநீர் என்றும் பாடம் புறநீர் மட்கல னறிய வாயிடை எனப்பாடங்கொள்ள வாய்ப்புத்தருகிறது. எனினும் நான்காம் அடியில் பெய்ந்நீர் என வருவதால் இக் கருதுகோள் ஆய்வுக்குரியது. ப.வெ.நா.