பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் 277 1202-255 இளிவே' யிழவே யசைவே வறுமையென விளிவில் கொள்கை யழுகை நான்கே. 5 பா.வே. 1. இழிவே - இளம்பூரணர் பாடம். 1203-255 மூப்பே பிணியே வருத்த மென்மையொடு யாப்புற வந்த விளிவர னான்கே. G պա 1204-257 புதுமை பெருமை சிறுமை யாக்கமொடு மதிமை சாலா மருட்கை நான்கே. 7 1205-258 அணங்கே விலங்கே கள்வர்தம் மிறையெனப் பிணங்கல் சாலா வச்ச நான்கே. R 1206-259 கல்வி தறுகண் புகழ்மை" கொடையெனச் சொல்லப் பட்ட பெருமித நான்கே. 9. பா.வே. 1. இசைமை - பேரா. பால. பாடம். 1207-260 உறுப்பறை குடிகோ ளலைகொலை யென்ற' வெறுப்ப வந்த வெகுளி நான்கே. 10 பா.வே. 1. யென்றன” - பதிப்பு 24 அச்சுப் பிழையாகலாம். fi". 2. வெறுப்பின் - பேரா. பால. பாடம். "இழிவென்பது எதுகை நோக்கி இளிவென நின்றது. அன்றி இளிவென்பதும் ஒரு சொல்விழுக்காடு எனினும் அமையும்." பால. (பதிப்பு 83 பக். 272) புதுமையை ஆக்கத்துள் அடக்கி முதுமை என்பது பாடமாகவும் உரைப்ப" என இந்நூற்பாவின் விசேட உரையில் பேரா. கூறுகிறார். இதனால் புதுமைக்கு முதுமை எனப் பாடங்கொண்ட - இளம்பூரணரல்லாத - ஒர் உரையாசிரியர் இருந்தமை புலனாகிறது. ப.வெ.நா. யென்றன என்பது தான் வ.உ.சி. பதிப்பின் பாடம். எந்தப் பதிப்பிலும் இந்த இடத்தில் என நனி என்ற பாடம் காணப்படவில்லை. ஆனால் சோம. "ஈண்டு என நனி வெறுப்பின் வந்த என்று இளம்பூரணர் கொண்ட பழையபாடம் வெறுப்பு மிகுதியால் விளையும் வெகுளியின் பெற்றியை இனிது விளக்குதலறிக" (பதிப்பு 72 பக். 72) என்கிறார். மெய்ப்பாட்டியல் உரைவளப் பதிப்பாசிரியராகிய வெள்ளை.