பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f = பொருளதிகாரம் ..+ 7. உவமையியல் 1225-27 8 வினைபயன் மெய்யுரு வென்ற நான்கே வகைபெற வந்த வுவமைத்" தோற்றம். I பா.வே. 1. பென்ற - சுவடி 73. எழுத்துப்பிழை, வெ>பெ. 2. உவமத் - பேரா. பால. பாடம். 1226-279 விரவியும் வரூஉம் மரபின வென்ப. 2 1227-280 உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங் காலை. 3. 1228-231 சிறப்பே நலனே காதல் வலியொ(டு) அந்நாற் பண்பு நிலைக்கள மென்ப. 4.

டி உவம இயல் என்பது பேரா. பால. கொண்ட பாடம். "உவமம் - உவமை என்னும் சொற்கள் தம்முட் பொருள் வேறுபாடுடையன வாகும். உவமம் என்பது உவமிக்கும் பொருளையும் உவமை என்பது அதன் தன்மையையும் குறிப்பனவாகும். அவற்றால் விளக்கம் பெறுவது பொருளாகும். உவமத்தை வடநூலார் உபமானம் என்றும். பொருளை உபமேயம் என்றும் கூறுவர். உவமம் என்பது சொல்லப்படும் பொருளை விளக்கம் செய்யக் காட்டாக வருவது. அதனான் விளக்கம் பெறுவது பொருள். அவ்விரண்டிற்கும் உரிய பொதுத்தன்மையே உவமை எனப்படும். உவமம் - பொருள் இவற்றின் பொதுத்தன்மையைத் தொடர்பு படுத்திக்காட்டும் சொல் உவமச் சொல்லாகும். உவமச் சொல்லை உவம உருபு என வழங்குவர்.' அத்தாவது பவளம் போற் செந்துவர் வாய் என்னுந் தொடருள் பவளம் என்பது உவமம். வாய் என்பது பொருள். செந்துவர் என்பது உவமை. போல் என்பது உவம உருப . உவமை என்பது உவமப் பொருளின் தன்மையைக் குறிக்கும் என்பதை. உவமத் தன்மையும் உரித்தென மொழிப பயனிலை புரிந்த வழக்கத் தான உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும் என ஆசிரியர் தெளிவு படுத்தலான் அறியலாம். "உவமப்பொருள் உவமத்தன்மை உவமச்சொல் (உருபு) மூன்றும் பொருளை (உவமேயத்தை) விளக்கி நிற்கும் காரணத்தான் அம்மூன்றையும் உவமம் என்னும் குறியீட்டான் வழங்குதல் நூலாசிரியன்மார் மரபாகும். அவற்றை இடம் நோக் வேறுபடுத்தி உணர்தல் வேண்டும்." பால (பதிப்பு 93 பக். 341 - 342)