பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல் EE 5 1229–282 கிழக்கிடு' பொருளே டைந்து மாகும். 5 பா.வே. 1. கிழக்கிடும் - இளம்பூரணர் பாடம். கிளந்திடும் - சுவடி 73. பிழை. பொருந்தாப்பாடம். 1230-283 முதலுஞ் சினையுமென் றாயிரு பொருட்கும்' நுதலிய மரபி னுரியவை யுரிய, G பா.வே. 1. பொருட்கு - இளம்பூரணர் பாடம். 1231-284 சுட்டிக் கூறா வுவம் மாயிற் பொருளெதிர் புணர்த்துப் புணர்ந்தன கொளவே. 7 பா.வே. 1. புணர்த்தன - இளம்பூரணர் பாடம். புணர்ந்தனர் - சுவடி 73, 115, பிழை. ரகர மெய் மிகை. புணர்ந்து புணர்த்தனர் - பதிப்பு 2. பிழை. 1232-285 உவமமும்' பொருளு மொத்தல் வேண்டும். 8 பா.வே. of 1. உவமையும் - பேரா. பால. பாடம். + பதிப்பு 24, 71 இரண்டிலும் மூலத்தில் வுவம என உள்ளது. இளம்பூரணரின் உரைப்பகுதியில். "சுட்டிக் கூறா உவமை என்பது உவமிக்கப்படும் பொருட்கு உவமை இது எனச் சுட்டிக் கூறாமை" என்று காணப்படுகிறது. இதனால் இளம்பூரணர் கொண்ட மூலபாடம் 'சுட்டிக் கூறா வுவமை யாயில்" என்பது புலனாகிறது. மூலத்தில் நேர்ந்த மாற்றத்திற்குச் சுவடி எழுத்தாளரின் பேரா. பாட நினைவு காரணமாகலாம். ப.வெ.நா.

  • இனி உவமமும் பொருளும் ஒத்தல் வேண்டும் எனப்பாடங்கொண்டு உவமம்

இரட்டைக்கிளவியாயினும் நிரல்நிறுத்தமைந்த நிரல்நிறை கண்ணமாயினும் பொருளும் அவ்வாறே வருதல் வேண்டும் என உரை கூறுவார் இளம்பூரணர். அப்பாடத்திற்கு அவ்வுரை பொருந்தும். எனினும் ஆசிரியர் இரட்டைக்கிளவி பற்றியும் நிரல்நிறை பற்றியும் மேலே விதந்து கூறலின் அது கூறியது கூறலாகும். அவ்வுரையான் உவமை பொருளோடு ஒத்தல் வேண்டும் என்னும் இன்றியமையாத விதி எய்தாதொழிதலின் அப்பாடம் பொருந்தாமையறியலாம்." பால. (பதிப்பு 83 பக். 352)