பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பா.வே. சிறப்புப் பாயிரம் பனம்பாரனார் வடவேங்கடந் தென்குமரி(ய்) ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமி பூழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல் நிலந்தரு திருவிற் பாண்டிய னவையத்(து) அறங்கரை நாவி னான்மறை முற்றிய (வ) அதங்கோட் டாசாற் கரிறபத் தெரிந்து மயங்கா மரபி னெழுத்துமுறை காட்டி மல்குநீர் வரைப்பி னைந்திர நிறைந்த தொல்காப் பியனெனத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமை யோனே. 1.அவிந்திரம் - சுவடிகள் 11, 73, 1044, 1052, 1053 ஐயிந்திரம் - சுவடி 115 பிழை (5) (10) (15)

'அகரத் திம்பா யகரப் புள்ளியு மையென் னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் (தொல், 56) என்னும் விதிப்படி ஐந்திரம் அய்ந்திரம் ஆகுமேயன்றி அயிந்திரம் என ஆகாது. கே.எம்.வி. 'அகர இகரம் ஐகாரம் ஆகும் (தொல். 54) என்னும் விதிப்படி வைரம் - வயிரம், கைலை - கயிலை என வடசொற்கள் மாற்றெழுத்துப் பெற்றுவரும். இதனால் ஐந்திரம் அயிந்திரம் ஆகலாம். பால.