பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.உருபியல் I 74. அஆ உஊ ஏஒள வென்னும் அப்பா லாறன் னிலைமொழி' முன்னர் வேற்றுமை யுருபிற் கின்னே சாரியை. பா.வே. 1. லாற னிலைமொழி - பல பதிப்புகளில் இவ்வாறே காணப்படுகிறது. எனினும் விரிக்கும் வழி விரித்தல் என விகாரம் பெற்ற லாறன் னிலைமொழி என்னும் பாடமே ஒலிநயமிக்கது. பதிப்பு 57இல் லாறன என்பது அச்சுப்பிழை. 175. பல்லவை நுதலிய அகர விறுபெயர்' வற்றொடு சிவன லெச்ச மின்றே. பா.வே. 1. ஈற்றுப்பெயர் - சுவடி 73, 10:51,செய்யுளோசைக்கு இறுபெயர் ஏற்றது. 175. யாவென் வினாவு மாயிய விரியாது. 177. சுட்டுமுத லுகர மன்னொடு சிவனி(ய்) ஒட்டிய மெய்யொழித்' துகரங் கெடுமே. பா.வே. 1. மெய்யொழிந் - பதிப்புகள் 47, 57இல் சு.வே. எழுத்துப்பிழை. 178. சுட்டுமுத லாகிய வைய்யென் னிறுதி' வற்றொடு சிவணி நிற்றலும் உரித்தே. பா.வே. 1. வையெனிறுதி- பல பதிப்புகளிலும் இதுவே பாடம். எனினும் யாப்பியல் நோக்கில் இதில் நூற்பாவின் அரையடியாதற்குப் போதிய ஒசையில்லை வைய்யென் என விரிந்தவடிவமே ஏற்றது. இவ்வடிவத்தைப் பதிப்புகள் 47, 57 இரண்டும் சு.வே. எனக் காட்டுகின்றன.