பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 வதை அறிந்து மகிழ்கின்றேன். கினு’ என்பதற்கும் குனி' என்பதற்கும் நெருங்கிய ஒற்றுமை இருக்கிறதல்லவா? தெலுங்கிலிருந்து சில எடுத்துக்காட்டுகள் வருமாறு: தெலுங்கு பேச்சுத்தமிழ் எழுத்துத்தமிழ் தெலுங்குனி தெரிஞ்சி கினு தெரிந்துகொண்டு படுகுனி படுத்து கினு படுத்துக்கொண்டு நேர்ச்சுகுனி கத்து கினு கற்றுக்கொண்டு தீசு குனி அழைச்சிகினு அழைத்துக்கொண்டு வேசுக்குனி அணிந்துகினு அணிந்துகொண்டு இவ்வாறு சிறு சிறு ஒலி வேற்றுமை உள்ள அமைப்பு கள் நிரம்ப உள்ளன. கன்னடம்: தமிழ் ழகரம் கன்னடத்தில் ளகரம் ஆகிறது. காட்டு கள்: ஏழு = ஏளு, கூழு=கூளு. கோழி=கோளி. தென் தமிழ் நாட்டினரும் ழகரத்தை ளகரமாக ஒலிப்பது இங்கே நினைவு கூரத் தக்கது. தமிழ் அகரமும் பகரமும் கன்னடத்தில் ஹகரம் ஆகும். காட்டுகள்: அப் பளம் = ஹப்பளம். பாலு= ஹாலு, பண= ஹன. பேன், பேனு=ஹேனு. பல்லி=ஹல்லி. பல்லு=ஹல்லு. புலி= = ஹீலு. தமிழ் வகரம் கன்னடத்தில் பகரம் ஆகும். காட்டு கள் வரை = வரெ=பரெ. வெள்ளி=பெள்ளி. வண்டி=பண்டி தமிழ் றகரம் கன்னடத்தில் ரகரம் ஆகும். காட்டுகள்: முறம்=மொற(ம்) =மொரெ. திற = தெற=தெர.மாறு= மாரு. சாறு= சாரு. குறை = கொறெ= கொரெ.சிதறு= செதறு=கெதரு. கூரை=கோரெ (துணி), நிறைவு=நெரவு, சிறை =செறெ=செரெ. இவற்றுள், றகரம் ரகர மானதன்றி