பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 மசாலா இருக்கிறதா என்று சிலர் கேட்பது இங்கே ஒப்பு நோக்கத் தக்கது, மண்ணான்: மலையாளத்தில் உள்ள மற்றொரு சொல் சுவையா யுள்ளது. தமிழில் உள்ள வண்ணான் என்பது மலையாளத் தில் மண்ணான்’ என்று வழங்கப்படுகிறது. வண்ணான் -மண்ணான் என்றால் சலவைத் தொழிலாளி(Washerman) என்பது பொருள். இந்தக் காலத்தில் வண்ணான் என்று சொன்னால் அது குறைவாகத் தோன்றுகிறது: அந்த இனத்தார் சினம் கொள்வர்-வருத்தப்படுவர். குறைவோ வருத்தமோ தராத சொல்லக ஏகாலி என்பது சிற்றுார்ப் புறத்தும், சலவைத் தொழிலாளி என்பது நிகர்ப் புறத் தும் இப்போது வழங்கப்படுகின்றன. வண்ணான்’, ‘மண் ணான்’ என்னும் சொற்கட்கும் சலவைத் தொழிலாளி என்பதே பொருளாகும். வண்ணான் என்பதற்கு, உடைக்கு வண்மை-அழகு ஊட்டுபவன் என்பது பொருள். மலையாளத்திலுள்ள மண் ணான் என்பதற்கு, உடையைத் துய்மை செய்பவன். அணி (அலங்காரம்) செய்பவன் என்பன பொருளாம். மண்ணுபவன் மண்ணான். மண்ணுதல் என்பதற்குக் கழுவு தல், தூய்மை செய்தல், அழகு செய்தல் என்பன பொரு ளாகும். இதற்கு ஒளவையாரின் மூதுரை நூலிலிருந்து ஓர் அகச் சான்று காண்பாம். "மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம் உடல் சிறியர் என்றிருக்கவேண்டா-கடல் பெரிது மண்ணிரும் ஆகாது அதனருகே சிற்றுாறல் உண்ணிரும் ஆகி விடும்’ (12)