பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 தற்கு ta, daஎன இரண்டும், 'த' என்பதற்கு Thea,pha என இரண்டும், ப' என்பதற்கு Pa, Ba என இரண்டும் இருப்பதுபோல் இரண்டிரண்டே போதுமானது, தமிழி லும், பக்கம் - அகம், தங்கம்என்னும் மூன்று சொற்களி லும் உள்ள மூன்று ககரங்களும் ஒலி வேறுபாடுடையன. 'க' போலவே ச, ட, த, ப என்பனவும் முன் பின் உள்ள எழுத்துகளை நோக்க ஒலி வேற்றுமை உடைய்னவே. சமசு கிருதம் தன் எழுத்துகளைப் பெருக்கிக் கொண்டது அதன் தலை எழுத்து. அதன் சொற்களைச் சேர்த்துக் கொண்ட தால், அதன் தலை எழுத்தைத் திராவிட மொழிகளும் பெற்றுக் கொண்டு, கற்கும் குழந்தைகட்குத் தொல்லை கொடுக்கின்றன. எப்படியோ புகுந்து கொண்டு ஆட்சி செலுத்துகிற சமசுகிருத மொழியின் திறமையைப் பாராட்டுவதா? ஏமாறிய திராவிட மொழிகளின் எளி மையை எண்ணி இரங்குவதா? ஒன்றும் புரியவில்லை. வடமொழிப் பித்தில் தெலுங்கு ‘ழ’ எழுத்தையும் கன்ன டம் ழ,றஎன்னும் எழுத்துகளையும் துறந்துவிட்டன. இந்த இரங்கத் தக்க எளிய நிலை ஏற்பட்டதால், திராவிடமொழிகள் சமசுகிருதத்திலிருந்து பிறந்தவை என்று சிலர் அல்லது பலர் கூறுகின்றனர். இவர்கட்கு ஒர் உண்மையை வலியுறுத்த வேண்டியது நமது கடமை யாகும். எண்முறை: ஒரு குடும்ப மொழிகள் எண்ணுப் பெயர்களிலும் உறவுப் பெயர்களிலும் ஒரளவாயினும்ஒத்திருக்கும் என்பது பொதுவிதி. இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இலத்தீன் மொழியுள்ள ஐரோப்பிய இடத் திற்கும் அதே குடும்பத்தைச் சேர்ந்த சமசுகிருதம் உள்ள வட இந்தியாவுக்கும் இடையே ஒருதோற்றம் எண்ணாயிரம் கி.மீ. தொலைவு இருக்கும்.அப்படியிருந்தும்,