பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 சமசுகிருதம் தாயா-யுக்கதா? தமிழ் தவிர்த்த மற்ற திராவிட மொழிகளில் அளவு மீறிச் சமசுகிருதச் சொற்கள் புகுந்து தமிழுக்கும் அவற்றிற் கும் மிக்க வேறுபாட்டை உண்டாக்கி விட்டன என்னும் உண்மையை எவரும் மறுக்கார். இந்தக் காலத்தில் ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசுவதிலும் எழுதுவதி லும் பலர்பெருமை காண்பது போல, அந்தக் காலத்தில் சமசு கிருதச் சொற்களைக் கலந்து பேசுவதிலும் எழுது வதிலும் பெருமை கண்டனர். சொற்களைச் சேர்த்துக் கொண்டதல்லாமல், சமசுகிருத எழுத்துகளையும் அப் படியே எடுத்துச்கொண்டனர். சமசு கிருதத்திலுள்ள ரு, ரு, லு, லூ, அம், அஹ என்னும் ஆறு உயிர் எழுத்துக் களையும் இம்மொழிகள் சேர்த்துக் கொண்டன. மற்றும், புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்டதுபோல், சமசுகிருதத்தில் உள்ளாங்கு க, ச, ட, த, ப, என்னும் ஜந்திலும் உள்ள நந்நான்கு எழுத்துகளை யும் எடுத்துக் கொண்டன. சமசு கிருதச் சொற்களைத் தம் மொழிகளில் எழுதுவதற்கு அந்த நந்நான்கும் தேவைப் படலாயின. வெளவால் வீட்டிற்கு விருந்தினராகச் செல்பவரும் தலை கீழாகத் தொங்கித்தானே ஆகவேண் டும்? இம்மொழிகள் சமசுகிருத நீர்நிலையில் முழுகி நனைந்து, க, ச, ட, த, ப - என்பவற்றின் நந்நான்கு எழுத்துகளையும் எடுத்துக்கொண்டு சுமையைப் பெருக்கிக் கொண்டிருக்க வேண்டிய தில்லை. இரண்டிரண்டு எடுத் துக் கொண்டால் போதும் தமிழில், ல, ள-ர, ற - ந, ண, ன, என ஒத்த ஒலியுடைய எழுத்துகள் நந்நான்கு இல்லை. ஆங்கிலத்தில் க’ என்பதற்கு Ka, ga, என இரண் டும், ச' என்பதற்கு Sa, Ja என இரண்டும், ‘ட’ என்ப