பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 அடிவேர் ஆய்வுப் போதை மேலே தந்துள்ள அட்டவணைகளில் உள்ள சமசுகிருதச் சொற்களை நீக்கிவிடின்,இம்மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்னும் இமாலய உண் மையைக் காப்பாற்றிக் கொள்ளத் தமிழ் மொழிக்கே வந்தாக வேண்டும். இம்மொழிகள் சமசுகிருதச் சொற் கட்குப்பதிலாகத் தமிழ்ச் சொற்களைப் பெற்றுக்கொள்வது என்பது, இடையிலே இழந்து விட்ட தம் பழைய சொற் களை மீண்டும் பெற்றுக் கொள்வதாகவே பொருள்படும். இங்கே தாழ்வு மனப்பான்மைக்கு இடமில்லை. இவ்வளவு சான்றுகளும் கருத்துகளும் அறிவித்த பிற காயினும், தொல் திராவிட மொழி என்பது இப்போதுள்ள எழுத்துத் தமிழே என்பதை, மொழியியலாருள் மாற்றுக் கொள்கையுடையவர்களா யிருப்பவர்கள் தம் கொள்கையை மாற்றிக் கொண்டு ஏற்றுக் கொள்வார்களா? கையில் இருக் கும் வெண்ணெயை மறந்து நெய்க்கு அலைவது ஏன்? தோளின் மேல் துணியைப் போட்டுக் கொண்டு வீடு, முழு வதும் தேடுவோரும் உண்டு. முழங்கையில் மாட்டிக் கொண்டிருப்பதை மறந்து குடையை வெளியில் தேடு வோரும் உளர். எழுத்துத் தமிழை மறந்து வேறு தொல் திராவிட மொழி தேடுவோரும் இன்னவரேயாவர். அடிவேர் ஆய்வு: திராவிட மொழியியல் ஆராய்ச்சியாளருள் சிலரிட முள்ள ஒருவகைக் குறையை இங்கே குறிப்பிடவேண்டிய கடமை உள்ளது. அவர்கள் தொல் திராவிட மொழி என்னும் ஏதோ ஒரு மொழி மறைந்து விட்டதாக எண்ணிக்கொண்டு, தாம் செய்யும் சொற்களின் அறுவை