பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 கும். இலக்கியங்களைப் படிப்பதன் வாயிலாக எல்லாப் பகுதியினர்க்கும் எல்லாச் சொற்களும் அறிமுகம் ஆகின்றன. இவ்வாறே திராவிட மொழிகளின் சொற்கள், மக்கள் கலக்கும்போது ஒன்றோ டொன்று அறிமுகம் ஆகித் தொடர்புடைய ஒரு மொழிச் சொற்களாகக் காட்சி தரு கின்றன. இந்த உண்மைகளை யெல்லாம் மொழியியலார் கருத்தில் கொள்ளல் வேண்டும். சிலர், தொடர்பு ஒரு சிறிதும் இல்லாத சொற்களை அடிச்சொல் கண்டுபிடிப்பதன் வாயிலாகத் தொடர்பு படுத்தவும் அதற்கு உறுதுணையாகத் தொல்திராவிடம் கண்டு பிடிக்கவும் எடுத்துக்கொள்ளும் முயற்சியைக் குறைத்துக்கொண்டு, கருத்து ஆராய்ச்சியிலும் ஒரு சிறிதா வது காலத்தைச் செலவிடின், அச்செயல் பொது மக்கட் குப் பயனளிக்கும். யான் இவ்வாறு கூறுவதற்குக் காரணம், நேரில் கண்டு பெற்ற ஒரு பட்டறிவு (அனுபவம்) ஆகும். அது வருக! விளக்கும் வெளக்கும்: ஒரு கருத்தரங்கில் பேசிய மொழியியல் தொடர்புடைய ஒர் அறிஞர், வெளக்கு' என்பதிலிருந்துதான் விளக்கு: என்பது வந்தது என்று கூறினார். வெள்ளை, வெளிச்சம் என்பவற்றின் வேர்ச் சொல் வெள்’ என்பதாகும்; எனவே, வெளிச்சம் தரும் விளக்குக்கும் வெள்’ என்பதே அடிச் சொல்லாகும். எனவே வெளக்கு என்பதுதான் விளக்கு என்பதாயிற்று என்பது போல ஏதேதோ பேசினார். விளக்கு என்றதும் விள் என்பதும், வெளிச்சம் என்றதும் வெள்” என்பதும் மொழியியலார் சிலர்க்கு நினைவுக்கு வந்து விடு கின்றன. விள், வெள் என்பவற்றை முதலில் உண்டாக்கிக் கொண்டு, பின்னர் விளக்கு, வெளிச்சம் என்றசொற்களைத் தொடக்கக் கால மக்கள் உண்டாக்க வில்லை; அவர்கள்