பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

133


பருத்தி அதற்கு மாறாக, நான்கு ஆண்டுகள் வரை உயிரோடு வாழ்ந்து பல மடங்குப் பலனைக் கொடுத்தது.

திரு. நாயுடு பயிரிட்ட பருத்திச் செடியில் இரண்டரை அங்குல இழையுள்ள இருபத்து நான்கு இராத்தல் பருத்தி விளைவதைக் கண்ட மற்ற விவசாய மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். இதில் இன்னொரு அதிசயம் என்னவென்றால், நாயுடு அவர்களின் பருத்திச் செடியின் விதைகளை மீண்டும் விதைக்கும்போது; நான்கே மாதங்களில் அவை பயிராகி ஐந்தடிச் செடிகளாக உயர்ந்து விடுகின்றன.

12 அடி உயரம் வளரும்
துவரைப் பயிர்!

துவரைச் செடி 5 அல்லது 6 அடி உயரம் உடையதாய் விளையும். ஒவ்வொரு செடியும் 8 அவுன்ஸ் தானியப் பயிர்களைக் கொடுக்கும். அவை 9 மாதங்கள் உயிரோடு இருக்கும்.

ஆனால், திரு. நாயுடு அவர்களால் ஊசிப் போடப்பட்டு, வளர்ந்த பயிர் - 12 அடிகள் வரை, அதாவது, இரண்டு மனிதர்களை ஒரே நீளமாக்கிப் பார்த்தால் எவ்வளவு உயரமாகத் தோற்றமளிப் பார்களோ, அதைப் போலவே துவரைச் செடியாக அல்லாமல் மரம் போல காட்சி தந்தது.

அந்த துவரை மரத்தின் பயிரிலிருந்து 60 அவுன்சு பயிர் தானியங்களைப் பெறலாம். இந்தத் துவரைப் பயிர் 4 ஆண்டுக் காலம் உயிரோடு வாழ்கின்றது. ஒருவேளை துவரைப் பயிர்களை எதிர்பாராமல் நோய் தாக்குமானால்கூட, குறைந்தது அந்தப் பயிர் ஓராண்டுக் காலம் உயிரோடு வாழ்ந்து பலன்களைக் கொடுத்து வரும்.

15 அடிகள் வளரும்
சோளப் பயிர் புலன்!

சோளம் செடிகள் 15 அடிகள் உயரம் வளர்கின்றன. என்ன காரணம் இதற்கு? திரு. ஜி.டி. நாயுடு அவர்களது ரசாயன மருந்துடன் ஊசி ஏற்றப்பட்ட செடி என்பதே காரணம். மரம் போல வளர்ந்து காணப்படும் நாயுடு சோளப் பயிர், ஏறக்குறைய 28