பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


சென்றார்கள், ஏன் இங்கே இதை நினைவுப்படுத்துகிறேன் தெரியுமா? ஒரு முடிவை மனிதன் எடுத்துக்கொண்டால், எந்தச் சூழலிலும், எவ்வளவுதான் சபலங்கள் வந்தாலும், அதற்குச் சிறிதும் இடம் கொடுக்கக் கூடாது என்பதற்கு மட்டுமன்று: எதிர்நீய்ச்சலும் போட மன உறுதி வேண்டும் என்பதற்காகத்தான் கூறுகிறேன்.

இந்த மன உறுதி, மனவொழுக்கம், எல்லாச் செயல்களிலும், எல்லா நேரங்களிலும் ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடித்தாக வேண்டும். அதற்குத்தான் மனோதிடம் என்ற மாண்புமிகு பெயராகும். இது வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட பாடம். இந்தப் பாடம் எல்லாருக்கும் என்றும் தேவை.

இந்தியாவில் இருக்கும் மூடப் பழக்க வழக்கம், குறிப்பாகத் தமிழ் நாட்டைச் சூழ்ந்துள்ள மூடப் பழக்க வழக்கங்களுக்கு ஈடு இணையாக வேறு எதையுமே குறிப்பிட முடியாது. இதற்கு என்ன மூல காரணம்? அறியாமைதான்!

இத்தகைய மூடப் பழக்க வழக்கங்களை, மூட நம்பிக்கைகளை ஒழித்து, சீர்திருத்த எண்ணங்களைப் புகுத்தி வரும் தந்தை ஈ.வெ.ரா. பெரியார் மீது எனக்கு அளவு கடந்த அபிமானம், மரியாதை உண்டு. எனவே, தமிழ்நாட்டு மக்கள் தங்களது வாழ்க்கை யில் அறியாமையை ஒழித்து, அறிவியல் கண்ணோட்டத்துடன் வாழ்வதற்கு முன்னேற வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும்.

கடவுள் உண்டா என்ற
விவாதம் வேண்டாம்?

கடவுள் உண்டா? இல்லையா? என்று யாராலும் சொல்ல முடியாது. கடவுள் இருக்கிறாரா என்று விவாதம் செய்யக் கூடாது. அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே! கடவுள் இருந்தார் என்றாலும், இல்லை என்றாலும் ஒன்றும் செய்வதற்கு இல்லை. இருந்தால் இருக்கட்டும் இல்லாவிட்டால் போனால் போகட்டுமே! ஆனால் ஒன்று; கடவுள் இல்லை என்று யாராலும் சொல்ல முடியாது.

சமுதாயத்தில், புரோகிதர் வந்து திருமணம் நடத்தி வைப்பதையும் வெறுத்தேன். எனது இரண்டாவது மகள்