பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


புரண்டு, கதறி, I have Lost My Friend என்று பல முறைக் கத்திக் கதறிக் கீழே விழுந்தார்.

தொழிலியல் துறை, கல்வியியல் துறை, விவசாயவியல் துறை, பொறியியல் துறை, சித்த வைத்திய இயல் துறை, சமுதாயவியல் துறை, பொருளியல் துறைகளின் வித்தகராக, விஞ்ஞானியாக விளங்கிய கோவை கொடை வள்ளல் திரு. கோபால்சாமி துரைசாமி நாயுடு உடல் அலங்கார தேரில் சுடுகாடு சென்றது.

கோவை நகர் பிரமுகர்கள், கல்விமான்கள், தொழிலாளர், தோழர்கள், வணிக பெருமக்கள் அனைவரும் சூழ, திரு. நாயுடு உடல் சாம்பலாகி, கோவை மண்ணுக்கு உரமானது. ஆனால், அவரது ஆன்மா தொழிலியல் விஞ்ஞான உலகத்திலே பவனி வந்து கொண்டுதான் இருக்கின்றது!

என்று அவரது அந்த ஆன்மா பவனி, பேரின்பப் பேறு பெறும் என்றால், என்று ஜி.டி. நாயுடு அவர்களது தொழிலியல் விஞ்ஞானக் கனவுகள் - மக்கள் இடையே நனவாகி நடமாடு கின்றனவோ, அன்றுதான் - அவரது ஆன்மா மன நிறைவோடு பவனி வருவதை நிறுத்தி விண்ணில் விளங்கும். இந்த நன்றியைச் செய்யுமா தமிழ் இனம்?