உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

தொழில்துறை பற்றி

நம்முடைய நண்பர் பொன்னுசாமி அவர்கள் நேற்றைய தினம் பேசும்போது, தனியார் தொழிலை எல்லாம் நாம் இன்றைக்கு உருக்குலைக்கிறோம். அவர்களை விரட்டியடிக் கிறோம். தனியார் தொழில் தொடங்கவே அஞ்சுகிறார்கள் என்ற கருத்துப்பட சில செய்திகளை இங்கே எடுத்துச்சொன்னார். அப்போதே நான் அதற்கு மறுப்பு உரைத்திருக்கிறேன் என்றாலும் கூட, இந்த அரசைப் பொறுத்தவரையில் 'ஜாயின்ட் செக்டார்' என்கின்ற அந்த ஒரு நிலையோடு, கடந்த ஆண்டில் 'அசோசியேட் செக்டார்' என்கின்ற இன்னொரு நிலையையும் உருவாக்கி ஜாயின்ட் செக்டாரிலே அரசினுடைய பங்காக 20 விழுக்காடும், அசோசியேட் செக்டாரிலே 11 விழுக்காடும் என்று அப்படிப்பட்ட தொழில்களைத் தனியார் துறையோடு சேர்ந்து கூட்டு முயற்சியாகச் செய்வது என்று அறிவிக்கப்பட்டது. அந்த விழுக்காடுகள் அதிகமாக உள்ள அரசு பங்கீடுகளைக்கூட 'டிஸ்இன்வெஸ்மென்ட்' என்கின்ற முறையிலே உரிய நேரத்தில் பெற்று வேறு புதிய தொழில்களுக்கு அந்தத் தொகையை வழங்குகின்ற திட்டத்தையும் ஏற்கெனவே நாம் அறிவித்திருக்கின்றோம்.

எனவே, 26 விழுக்காடு என்பது அரசின் பங்கு என்று சொன்னால், ஏதோ அரசு என்பது எங்கேயோ இருக்கிறது என்று யாரும் கருதிக்கொள்ளக்கூடாது. அரசின் பங்காக 26 சதவிகிதம் என்பது மக்களின் பங்குதான். 26 சதவிகிதம் அரசின் பங்கு. 25 சதவிகிதம் தனியார் துறையிலே அவர்களுடைய பங்கு அஃதன்னியில் மீதமுள்ள சதவிகிதம் அத்தனையும் பொது மக்களுடைய ஷேர். அவர்களுடைய பங்குத்தொகைகள். எனவே, பொதுமக்களுடைய பங்குத்தொகை, அரசினுடைய பங்குத்தொகை இந்த இரண்டும் பொதுமக்களுடைய பங்குத்தொகைதான். 'அரசு' என்று நாம் தனித்துக் குறிப்பிட்டுச் சொன்னாலும் கூட, அது மக்களுடைய பங்குத்தொகைதான். அப்படிப்பட்ட மக்களின் பங்குத்தொகை அதிகமாக இருக்கின்ற நிலையில் உரிய பங்குத்தொகைகூட இல்லாமல், அதைவிடக் குறைவான பங்குத் தெகையை வைத்துக்கொண்டு முழு ஆதிக்கத்தையும் ஒரு தொழிலிலே நடத்தவேண்டும் என்று எண்ணுகின்ற தனியார்களை இந்த அரசு நிச்சயமாக சகித்துக் கொள்ளாது. அதனால்தான் கடந்த சில பல ஆண்டுகளாக, ஒரு நிறுவனம் அவர்கள் குறிப்பிட்ட

-