102
தொழில்துறை பற்றி
கடந்தகால ஆட்சி அறிவித்தது என்பதற்காக அவைகளை விட்டு விடாமல் அந்தத் தொழிற்சாலைகளை எல்லாம் தொடங்கி அதற்காக 62.3 கோடி ரூபாய் செலவில் இந்த அரசு முயற்சிகளை மேற்கொண்டு நடைமுறைப்படுத்தியிருக்கிறது. அதனுடைய விரவங்களைச் சொல்ல வேண்டுமானால் தமிழ்நாடு மக்னீசியம் அண்டு மெரையின் கெமிக்கல்ஸ், வாலிநோக்கத்தில் 9.60 கோடி ரூபாய் செலவில் டிட்கோ மட்டும் ஈடுபட்டு செய்யக்கூடிய தொழிற்சாலை. இந்தத் தொழிற்சாலை உப்புக் கழிவு நீரிலிருந்து மக்னீசியம் உலோகம் தயாரிக்கும் தொழிற்சாலை. இந்த உலோகம் அணுமின் உற்பத்திற்குப் பயன்படக்கூடிய ஒன்று ஆகும். இங்கே உற்பத்தி தொடங்கப்பட்டாகிவிட்டது. இது ஏற்கெனவே இருந்த அரசு அறிவித்தது. ஆனால் எந்த நட வடிக்கையும் எடுக்காமல் உறங்கிக் கிடந்த ஒன்று, இப்போது உற்பத்தியைத் தொடங்கி இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்து, டைட்டான் வாட்சஸ். ஏற்கெனவே கடிகாரம் செய்கின்ற அந்தத் தொழில் மட்டும் ஓசூரில் தொடங்கியது. அதற்கு கேசஸ் அண்டு பிரிசிலிட்ஸ் என்கின்ற அந்தத் திட்டத்தை ஏறத்தாழ 30 கோடி ரூபாய் செலவில் ஓசூரில் சிப்காட் தொழில் வளாகத்திலே நிறுவப்பட்டு டிட்கோ நிறுவனமும், டாட்டா நிறுவனமும் இணைந்து கூட்டுத் துறையில் கடிகாரம் தயாரிக்கின்றது. இந்தத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்ற கடிகாரங்கள்தான் இன்றைக்கு இந்தியாவிலேயே மிக அதிகமாக விற்பனை ஆகின்றன என்பதையும் நான் இங்கே மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். அந்தக் காடிகாரங்களுக்குத் தேவை யான கேசஸ், அதாவது கூடுகளை வெளிநாட்டிலிருந்து இது வரையிலே அங்கே இறக்குமதி செய்து இருந்த நிலையை மாற்றி அவைகளை அங்கேயே தயாரிப்பதற்கான அளவிலே அந்தத் தொழிற்சாலை இப்போது 30 கோடி ரூபாய் அளவிலே விரிவு படுத்தப்பட்டு இருக்கிறது இந்த ஆண்டில்.
சக்தி சோயாஸ் லிமிடெட், கூட்டுத் துறை. டிட்கோவும் சக்தி நிறுவனமும் இணைந்து 22.48 கோடி ரூபாய் மூலதனத்தில் பொள்ளாச்சிக்கு அருகிலே நிறுவப்பட்டுள்ளது. சோயாவிலிந்து சமையல் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை இது. தயாரிப்புப்