உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

103

பணியும் தொடங்கி விட்டது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இந்த ஆண்டிலே உற்பத்தியைத் தொடங்க உள்ள தொழில்கள் பற்றிய விவரங்களைத் தர விரும்புகிறேன். யூ.பி. பெட்ரோ புராடெக்ட்ஸ் லிமிடெட், 80.65 கோடி ரூபாய் மூல தனத்தில் மணலியில் கூட்டுத் துறையில் தொடங்கப்படும் தொழிற்சாலை ஆகும். அது, கட்டுமானப் பணிகள் எல்லாம் முடிவடையும் தருவாயில் உள்ளன. யந்திரங்கள் பொருத்தப் படுகின்ற பணி இன்னும் 2 மாதத்தில் முடிவுறும். பால்யூல்ஸ் மற்றும் இதர பெட்ரோலியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற் சாலை அது, பிளாஸ்டிக் தொழிற்சாலை போன்றவைகளுக்கும் மற்றும் வேறு சில தொழில்களுக்கும் பால்யூல்ஸ் பயன்படக் கூடிய பொருள் ஆகும்.

அடுத்து, ஐந்தாவதாக தமிழ்நாடு டெலி கம்யூனிகேஷன் லிமிடெட், மத்திய அரசும், மாநில அரசும் கூட்டு முயற்சியில் தொலைபேசிக் கம்பி மற்றும் தொலைபேசிக்கு வேண்டிய சில உபகரணங்கள் உற்பத்தி செய்கின்ற ஒரு தொழிற்சாலை. 23.30 கோடி ரூபாய் செலவில் அரக்கோணத்திலே அமைந்துள்ள தொழிற்சாலை இது. மாநில அரசு 25 சதவீதமும், மத்திய அரசு 26 சதவீதமும் இதிலே பங்கு பெறுகின்றன. 1989 ஆம் ஆண்டு மே மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, ஜூலை 90-க்குள் இயற்திரங்கள் வந்து சேர்ந்து தொழில் தொடங்கும் என்று எதிர்பார்க்கிற அளவுக்கு அந்த வேலைகள் விரைந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.

ஆறாவதாக, சங்கம் அலுமினியம் லிமிடெட். தேன்கனிக் கோட்டையில் 10.35 கோடி ரூபாய் முதலீட்டில் கூட்டுத் துறையில் ஆரம்பிக்கப்படுகின்ற தொழிற்சாலை. அலுமினியத்தால் தயாரிக்கப்படுகின்ற பொருட்கள் இங்கே உற்பத்தி ஆக இருக்கின்றன. கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இயந்திரங்கள் செப்டம்பர் மாதம் பொருத்தப்பட்டு டிசம்பர் திங்களில் உற்பத்தி தொடங்க இருக்கிறது.