உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

123

நெய்வேலி ராயல்டி பற்றி ஏதாவது குறை சொல்ல வேண்டும், அப்படியில்லாமல் பேசக்கூடாது என்ற நிலையில் பொன்னுசாமி அவர்கள் பேசுகிறபோது, அது என்ன 21/2 ரூபாய், 5 ரூபாய் வாங்கி இருக்கக்கூடாதா என்று கோட்டார், நெய்வேலி நிலக்கரி ராயல்டிக்கு ஒரு அட்டவணை தயாரித்து இருக்கிறார்கள். என்னென்ன நிலக்கரிக்கு எவ்வளவு ரூபாய் என்று அட்டவணை தயாரிக்கப்பட்டிருக்கிறது. அந்த அட்டவணையின்படி நெய்வேலி நிலக்கரி என்பது தரத்தில் சற்றுத் தாழ்ந்த நிலக்கரி லிக்னைட், எனவே அதற்கு 21/2 ரூபாய் ராயல்டி என்று அட்டவணை போட்டிருக்கிறார்கள். ஆனால், நடந்தது என்னவென்றால் முன் பிருந்த அரசு அதனுடைய மத்திய அமைச்சர் வசந்த்சாத்தே அவர்கள், 1989-ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 26-ம் தேதி எனக்கு எழுதிய கடிதத்தில் ராயல்டி டன் ஒன்றுக்கு 21/2 ரூபாய் வீதம் இனிமேல் வழங்கப்படும் என்றும், 1976-லிருந்து அதற்கு ஈடாக ஒரு மானியக் தொகை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டு இருந்தார், 1976-லிருந்து தரப்படும் என்று சொல்லியிருந்தார். நாங்கள் கூடாது, 1956 முதல் 1976 வரையில் அப்போதிருந்த காங்கிரஸ் அரசு எங்களுக்கு லாபத்தில் பங்கு வேண்டுமென்று கேட்டார்கள். அதனால் அங்கே லாபமே வரவில்லை. அதனால் பங்கு கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு 1976 வரையில் லாபம் கிடைக்கவில்லை என்று கணக்குக் காட்டியவர்கள், 1976-க்குப் பிறகு லாபம் வர ஆரம்பித்ததும், லாபத்தில் பங்கு என்ற ஒப்பந்தம் முடிந்துவிட்டது - காவிரிப் பிரச்சினை மாதிரி - அந்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது. இனிமேல் ராயல்டிதான் தரப்படும் என்று சொன்னார்கள். அந்தக் கணக்கு என்ன என்று நாங்கள் கேட்டோம். இடையில், இடைக்காலத்தில் யாரும் வலியுறுத்தவில்லை. இந்த அரசு வந்த பிறகு அதை வலியுறுத்திக் கேட்கத் தொடங்கியது. ராஜீவ் காந்தி காலத்தில் அதைக் கேட்கத் தொடங்கினோம். அப்போது எங்களுக்குச் சொல்லப்பட்ட பதில் 1976-லிருந்து 1989 வரையில் வழங்க வேண்டிய உரிமைத் தொகைக்கு ஈடான மானியத் தொகை ரூ. 19.09 கோடி என்றும், அதிலே தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வழங்கிய மின்சாரத்திற்காக அதாவது மின்சார வாரியத்திற்கு வழங்கிய மின்சாரத்திற்காக ரூ. 7.09 கோடி என்றும், அதைக் கழித்துக்கொண்டு நிகரமாக உங்களுக்கு தர வேண்டியது 12 கோடி