124
தொழில்துறை பற்றி
ரூபாய்தான் என்றும் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள். 12 கோடிதான் என்று சொல்லிவிட்டார்கள். அதற்குப் பிறகு நாம் அவர்களோடு வாதாடி, அதிகாரிகள் மட்டத்தில் டெல்லியில் அண்மையில் பேச்சு நடைபெற்று, அவர்கள் 1956-லிருந்து 1976 வரைக்கும் உள்ள உரிமைத் தொகையான ரூ. 4.28 கோடி தர சம்மதித்து, 1976-லிருந்து 1986 வரையில் உள்ள ராயல்டி 19 கோடி ரூபாயும் சேர்த்து, மொத்தமாக ரூ. 23.37 கோடி கொடுக்கிறோம். அதிலே நீங்கள் தரவேண்டிய ரூ. 7.09 கோடியைக் கழித்துக் கொண்டு 16.28 கோடி கொடுக்கிறோம் என்றார்கள். பிறகுதான் இந்த வயதானவன் டெல்லிக்குச் சென்று நம்முடைய அமைச்சர் ஆரிப்முகமது அவர்களைச் சந்தித்து அவர்களிடத்திலே நீண்டநேரம் வாதாடி 30 கோடி ரூபாயைப் பெற்றிருக்கிறோம். (மேசையைத் தட்டும் ஒலி). அந்த ரூ. 7 கோடியை நீங்களே தள்ளிவிடுங்கள் என்று சொல்லி அந்த ரூ. 7 கோடியையும் சேர்த்து, ரூ. 23 கோடி அஃதன்னியில் இது வரையில் தராததற்கு வட்டியைக் கொடுங்கள் என்று கேட்டு அவர்கள் வட்டியையும் சேர்த்துக் கொடுத்து, 30 கோடி ரூபாயை நாம் இன்றைக்குப் பெற்றிருக்கிறோம். அதற்காகவாவது பொன்னுசாமி மகிழ்ச்சி அடைந்து இருக்கவேண்டும். மகிழ்ச்சி அடையாமல் ஏன் இன்னும் அதிகம் வாங்கவில்லை என்று கேட்டார். நல்லதுதான். அப்படிக் கேட்பது நல்லது. இப்படி எல்லாம் கேட்டால்தான் நாங்கள் அங்கே செல்லும்போது இப்படியெல்லாம் கேட்கிறார்கள் ஆகவே தயவு செய்து கொடுங்கள், இல்லாவிட்டால் உங்கள் ஆட்சிக்குத்தான் கெட்ட பெயர் வரும் என்று சொல்லி, அவர்களிடத்திலே கேட்பதற்கு, இங்கே எதிர்க்கட்சிகள் வேகமாகப் பேசுவதை நான் நிச்சயமாகப் பயன்படுத்திக் கொள்வேன் என்பதை மாத்திரம் இங்கே சொல்ல விரும்புகிறேன்
நம்முடைய நண்பர் சொக்கர் அவர்கள் நேற்றையதினம் பேசியபோது, டி.ஐ.ஐ.சி. பற்றிக் குறிப்பிட்டு, அனுமதி அளிப் பதற்கும் தொகை வழங்குவதற்கும் உள்ள முரண்பாடுகள் என்று ஒன்றைக் குறிப்பிட்டார். இது ஓர் ஆண்டு கூட அல்ல. 9 மாத காலத்திற்கானது. அவர் அதிலே உள்ள ஒரு அடிக்குறிப்பைப்